Month: May 2017

காபூல் குண்டுவெடிப்பு: தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பு, 80 பேர் இறந்தனர், 350 பேர் காயமுற்றனர்

புதன்கிழமை காலையில் காபூலின் மிகவும் பாதுகாப்பான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை ஒரு பெரிய வெடிகுண்டு வெடிப்பு உலுக்கியது. குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்டதோடு 350 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல்  தற்கொலை கார் குண்டுவீச்சினால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்குதல் நடந்த இடத்தின் அருகில் சேதமாகின. “தற்போது இத்தாக்குதலின் இலக்கு எது என்று எமக்குத் தெரியாது, ஆனால் பெரும்பாலும் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் …

காபூல் குண்டுவெடிப்பு: தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பு, 80 பேர் இறந்தனர், 350 பேர் காயமுற்றனர் Read More »

Share

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு …

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து Read More »

Share

ஐஐடி மாணவர் மீது தாக்குதல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே 25ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அன்று இரவு சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் கலந்துகொண்ட …

ஐஐடி மாணவர் மீது தாக்குதல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் Read More »

Share

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி மீது குற்றச்சாட்டு பதிவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிஐ செய்தி முகமை தகவல்களின்படி, இந்தத் தலைவர்களின் மேல்முறையீட்டை லக்னெள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று நிராகரித்தது. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் பிற தலைவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறிவிட்டது. நீதிமன்ற விசாரணையின்போது, அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் …

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி மீது குற்றச்சாட்டு பதிவு Read More »

Share

இலங்கை நிலச்சரிவுகளில் 180 பேர் பலி

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன. மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிந்திய தகவல்களின் அடிப்படையில் 180 ஆக அதிகரித்துள்ளது. 110 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். மேலும் 109 பேர் காயமுற்றுள்ளனர் . இதே வேளை வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் நீர் மட்டம் குறைந்திருந்தாலும். இருப்பிடங்களை …

இலங்கை நிலச்சரிவுகளில் 180 பேர் பலி Read More »

Share

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை

மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது : கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் …

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை Read More »

Share

சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர். இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் …

சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல் Read More »

Share

சிபிஐ சோதனை குறித்த அறிக்கையை ப.சிதம்பரம் வெளியிட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவ்வறிக்கையில் சிபிஐ சோதனையின் இலக்கு தானே என்றும் எப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லையெனினும் தன் மீது குறி வைத்தே மத்திய அரசு இந்த சோதனையை மறைமுகமாக நடத்தியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மே 17ம் தேதி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ …

சிபிஐ சோதனை குறித்த அறிக்கையை ப.சிதம்பரம் வெளியிட்டார் Read More »

Share

சுற்றுப்பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணம் கிளம்பினார். இந்தியாவின் பொருளாதார ரீதியிலான பங்கேற்புகளை அதிகரிக்கவும், நாட்டிற்கு அந்நிய முதலீடுகளைக் கொண்டுவரவும் 6 நாட்கள் அரசு முறை பயணமாக மோடி கிளம்பியுள்ளார். முதலில் ஜெர்மனி செல்லும் அவர், அந்நாட்டின் தலைவர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்து சர்வதேச மற்றும் வட்டார ரீதியிலான வளர்ச்சி குறித்து விவாதிக்கிறார். இதில் இந்தியாவுக்கு ஜெர்மனிக்கும் இடையேயான அரசியல், பொருளாதார மற்றும் …

சுற்றுப்பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் மோடி Read More »

Share

வாள்வீச்சு உலகக்கோப்பையில் முதன்முதலாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

ஐஸ்லாந்தில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை வாள்வீச்சு (Fencing) போட்டியில்  இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் சி.ஏ.பவானிதேவி தங்கப்பதக்கம் வென்று  உள்ளார். சர்வதேச அளவில்  வாள்வீச்சு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். அரையிறுதிப்போட்டியில் சி.ஏ.பவானிதேவி பிரிட்டன் நாட்டு வீராங்கனை ஜெஸிகா கார்பை எதிர்கொண்டார். இதில் 15-11 என்ற புள்ளிகணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியிலும்  பிரிட்டன் நாட்டை சேர்ந்த சாரா ஜென் ஹம்ப்சன் வீராங்கனையை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 15-13 …

வாள்வீச்சு உலகக்கோப்பையில் முதன்முதலாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை Read More »

Share
Scroll to Top