இலங்கையில் பணி புறக்கணிப்பு போராட்டம்: தபால் சேவை முடக்கம்
இலங்கையில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் தபால் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து லட்சத்திட்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்க முடியாமல் தேங்கியுள்ளன. தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, 653 தபால் காரியாலயங்கள் மற்றும் 3,410 கிளை தபால் அலுவலகங்களின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.