அமெரிக்க குடியரசு கட்சி எம்பி உட்பட 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு; சுட்டவர் கொல்லப்பட்டார்
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், குடியரசுக் கட்சியின் மூத்த எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்ப்ட்டது. இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைச் சுட்டவர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவரும், அதிபர் தேர்தல் வேட்பாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளருமான ஜேம்ஸ் ஹாட்கின்சன் என கருதப்படுகிறது. ஜேம்ஸ் ஹாட்கின்ஸன் சம்பவ இடத்திலாயே பாதுகாப்பு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். குடியரசுக் கட்சியின் லூசியானா எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் உள்ளிட்டோர் பேஸ்பால் …