கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும்
கத்தாருடனான் முன்பு போல நட்புறவு தொடர பிற அரபு நாடுகளான சவுதி அரேபியா, யூ.ஏ.இ., பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகியவை 13 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் முக்கிய நிபந்தனைகளான அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் நட்புறவைத் துண்டிப்பது ஆகியவையும் அடங்கும். மேலும், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம், ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் லெபனானின் ஈரானிய ஆதரவிலான ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளிட்ட குழுக்களுடனான உறவுகளை கத்தார் துண்டிக்கும்படி அரபு நாடுகளின் நிபந்தனை கூறுகிறது. கத்தாரிலிருக்கும், தங்கள் அரசுகளின் …