ISIS

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல்: பாதசாரிகள் மீது வேனை மோதி 12 பேர் பலி

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் சாலையின் நிழல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது வேனை மோதியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஐஸிஸ் ( ISIS) இத்தாக்குதலை தாம் செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், போலீசார் இதனை தீவிரவாத தாக்குதலாகவே கருதுவதாக  தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் மரங்களின் நிழல் சூழ்ந்த பாதசாரிகள் செல்லும் பக்கவாட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக வாகனத்தை ஓட்டியதில் பலர் …

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல்: பாதசாரிகள் மீது வேனை மோதி 12 பேர் பலி Read More »

Share

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் நிச்சயமாக இறந்து விட்டார் : ஈரானிய ஊடகங்கள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி நிச்சயமாக இறந்துவிட்டார் என்று மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி உறுதியாகக் கூறியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இராக்கின் அரசு பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஈரானின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிரியாவின் ராக்கா அருகே கடந்த மாதம் 28-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் …

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் நிச்சயமாக இறந்து விட்டார் : ஈரானிய ஊடகங்கள் Read More »

Share

ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியா ?

ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விசாரித்து வருவதாக தெரிகிறது. ஐ.எஸ். அமைப்பினர் அவர்களது கவுன்சில் கூட்டத்தை ரக்காவில் நடத்தும் பொழுது, அதனைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் பாக்தாதி கொல்லப்பட்டாரா என்பதை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சிரியாவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும், அவர் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியாகியுள்ளது.

Share
Scroll to Top