நலம் தரும் மூலிகைகள் : 1 – புதினா & எகினெசியா
மூலிகை மருத்துவம் தொன்றுதொட்டு நம் இந்திய நாட்டிலும் உலகில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. தீக்காயம், வயிற்றுப்புண், வாயுத்தொல்லை, தூக்கமின்மை முதலான பல நோய்களையும் தீர்க்க பயன்பட்டு வருகிறது. இந்த தொடரில், நம் உடல்நலனுக்கு உபயோகமாகும் சில மூலிகைகளைப் பற்றி பார்க்கலாம். 1) புதினா புதினா மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை. புதினா இலையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டீ-யை குடிப்பதால் வலி, வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். இம்மூலிகையால் மாதவிடாய் வலி நிவாரணமும் பெற …