வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்
வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார். இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது : பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள …