ஸ்டாலின்

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர்.  இவர்  இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர். அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி வளர்மதி …

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம் Read More »

Share

மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு

கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் கூறினர். இதற்கு முன்னரும் இம்மூவரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிமுகவின் இரு கோஷ்டிகள், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்ததுடன், அதுபற்றிப் பேசுவதற்காக ஸ்டாலினை சந்தித்திருந்தனர். மேலும், மாட்டிறைச்சி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு …

மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஸ்டாலினுடன் சந்திப்பு Read More »

Share

எம்.எல்.ஏ-களுக்கு பணம் கொடுத்த விவகாரம் : சட்டசபையில் இன்றும் குரல்கொடுக்க திமுக முடிவு

நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரியதால் ஏற்பட்ட அமளியையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  தொடர்ந்து இன்றும் மீண்டும் குரல் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். புதன்கிழமையன்று கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக, சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் குறித்து சிறப்பு கவன …

எம்.எல்.ஏ-களுக்கு பணம் கொடுத்த விவகாரம் : சட்டசபையில் இன்றும் குரல்கொடுக்க திமுக முடிவு Read More »

Share

பொதுவாக்கெடுப்பே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு: ஸ்டாலின்

ஈழத்தமிழர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையருக்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ அரசியல் தீர்வு நிச்சயம் தேவை என்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பொது வாக்கெடுப்பால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Share
Scroll to Top