லண்டன் தீ விபத்தில் இதுவரை 58 பேர் பலி
லண்டனிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என்று போலிஸார் கூறினர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று போலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் கண்டி தெரிவித்தார். பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது பிறந்த நாளைக் குறித்த ஒரு அறிக்கையில் கூறியதாவது : நாட்டின் மிக துக்கமான மனநிலையை மறப்பதற்குக் கடினமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் நமது நாடு பயங்கரமான துயரங்களை தொடர்ந்து கண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்குள் லண்டனிலும் மான்செஸ்டரிலும் நடந்த …