முதுகுவலியைத் தடுக்கும் பழக்கவழக்கங்கள்
முதுகுவலி எதனால் வருகிறது என்று கண்டுபிடிப்பது கடினமானதுதான். என்றாலும், அதை தடுப்பதற்கும், வலியைக் குறைப்பதற்குமான வழிமுறைகள் பல உள்ளன. அன்றாட சில பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் ஆரோக்கியமான, முதுகுவலியில்லாத உடலை நெடுநாள் கொண்டிருக்க இயலும். 1.முழங்காலின் அடியில் ஒரு தலையணையை வைத்துத் தூங்குதல் முதுகு படுக்கையை தொடுமாறு நேராக தூங்குவதால் முதுகுத்தண்டின்மேல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கால்களை லேசாக உயர்த்திக்கொண்டு தூங்கும் போது இந்த அழுத்தம் குறைகிறது. முழங்காலின் அடியில் தலையணையை வைத்துத் தூங்கும்பொழுது, முதுகின்மீதான அழுத்தம் பாதியாகக் …