மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்
மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன. சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம். 1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea) மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த, சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து உடனடி …