பாகுபலி-2: உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை

சென்னை: பாகுபலி 2-ம் பாகம் இந்திய சினிமா கண்டிராத வசூல் சாதனை புரிந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் 28-ம் தேதிக்கு திரைக்கு வந்த இந்த படம் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 4000 திரையரங்குகளில் பாகுபலி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. பாகுபலி வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் 680 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதேபோன்று வெளிநாடுகளில் முதல் வாரத்தில் 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனிடையே பாகுபலி திரைப்படத்தை இணையதளம் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ். ராடா, அனுஷ்கா, தமணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி திரைப்படம் இந்திய திரைப்பட துறையில் சாதனையாக கருதப்படுகிறது. 4 ஆண்டுகள் உடைத்து உருவாகிய படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திரை துறையினர் கருத்தாகும்.

Share