பத்திரப்பதிவில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது. அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில், பத்திரப்பதிவில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஜி.எஸ்.டி., மசோதா, மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Share