தீ விபத்து

86 மாடிகளை கொண்ட துபாய் டார்ச் டவரில் தீ விபத்து

துபாய் நகரிலுள்ள 86 மாடிகளை கொண்ட  பிரபல டார்ச் டவரில் தீ விபத்து ஏற்பட்டு சேதப்படுத்தியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது தீ விபத்து ஆகும்.  சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டடத்திலுள்ள 676 அபார்ட்மெண்ட்களில் வசித்திருந்தவர்களை  பத்திரமாக அப்புறப்படுத்தியதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் டவர், 337 மீட்டர் …

86 மாடிகளை கொண்ட துபாய் டார்ச் டவரில் தீ விபத்து Read More »

Share

முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உலகிலேயே விலையுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தியேட்டர், நீச்சல் குளம் உள்பட சகல வசதிகளும் காணப்படுகின்றன. இதன் 6–வது மாடியில் முகேஷ் அம்பானி தோட்டம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், 6–வது மாடியில் …

முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து Read More »

Share

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததில் 148 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில்,  நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தத்தில் 148 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. டேங்கர் லாரி வேகமாக நெடுஞ்சாலையில் ஒரு வளைவில் ஓடியபோது, டயர் ஒன்று தீ பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனைப் பார்ப்பதற்கும் கவிழ்ந்த லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்கவும் பெருங்கூட்டமாக அருகிலிருந்து வந்த மக்கள் கூடினர். கவிழ்ந்த 45 நிமிடங்களுக்குப் பின் …

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததில் 148 பேர் பலி Read More »

Share

லண்டன் அடுக்கு மாடி கட்டிட தீ விபத்து: சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு

லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு லண்டனில்   அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். …

லண்டன் அடுக்கு மாடி கட்டிட தீ விபத்து: சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு Read More »

Share

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர்

மேற்கு லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் …

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர் Read More »

Share

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு …

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து Read More »

Share

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Share
Scroll to Top