ஜாமீனில் விடுதலை

பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: எடப்படி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை சிறைவிடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரினர்.  இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “மதிப்பிற்குரிய பேரறிவாளனை பரோலில் அனுப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 10 ஆண்டுகளை சிறையில் கழித்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். பேரறிவாளனுக்கு …

பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: எடப்படி பழனிசாமி Read More »

Share

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட சின்னமான “இரட்டை இலையை” திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனின் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் இருந்தனர். …

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது Read More »

Share
Scroll to Top