அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியன் மர்ம மரணம்

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, நாமக்கலில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர். இவர், இன்று தனது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வருமான வரித் துறை விசாரணை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கிய பிடிகள் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளன.

Share