சட்டமன்றத்தில் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு குறித்து இன்று விளக்கம்!

2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குச் சட்டமன்றத்தில் விளக்கமளிக்கப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக மற்றொரு அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டினார். இதையடுத்துக் கபில் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் நீக்கினார். 

இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கபில் மிஸ்ராவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் தன் மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது என்றும், உண்மையே இறுதியில் வெல்லும் என்றும் தெரிவித்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்குச் சட்டமன்றத்தில் பதிலளிக்கப் போவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார். 

Share