காஷ்மீர்

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவிக்காக தேசிய தடகள அமைப்பும், புனேவில் உள்ள ‘ஷர்ஹாத்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் நேற்று மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 21.1 கி.மீ. தூரத்துக்கான பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். …

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு Read More »

Share

காஷ்மீரில் சீன துருப்புக்கள் நுழையலாம் : சீன நிபுணர் சொல்கிறார்

சீனா – பூட்டான் நாடுகளிடையேயுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் டோக்லாமில் நுழைந்த வாதத்தை முன்வைத்து காஷ்மீர் இந்திய எல்லைக்குள் தனது நாட்டின் துருப்புக்கள் நுழைய முடியும்  என்ற தலைப்பில் ஒரு சீன நிபுணர் வாதிட்டார். சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் அவர் மேற்படி வாதத்தைக் கொண்டுள்ள கட்டுரையை எழுதியுள்ளார். இந்தியா டோக்லாம் பகுதிக்கு ராணுவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட பல வாதங்களில் மேற்படி வாதமும் ஒன்றாகும். இந்தியா இதுகுறித்தான தனது நிலையை முன்பே தெரிவித்திருந்தது. சீனாவின் …

காஷ்மீரில் சீன துருப்புக்கள் நுழையலாம் : சீன நிபுணர் சொல்கிறார் Read More »

Share

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 போலிஸாரை கொன்றனர்

முன்னெப்போதும் இல்லாத கொடூரத்துடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீரில் 6 போலிஸாரை கொன்று அவர்களது முகங்களை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைத்திருக்கின்றனர். ஆனந்த்நாக் மவட்டத்தில் அசாபால் பகுதி தாஜிவாரா என்ற இடத்தில்  நேற்று மாலை, போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், சப் இன்ஸ்பெக்டர் பெரோஷ் உள்ளிட்ட 6 போலீசார் பலியானதாக போலீஸ் டிஜிபி வைத் கூறி உள்ளார். பலியான பெரோஷ் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடன் சென்ற டிரைவர் மற்றும் 4 காவலர்கள் பலியாகி …

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 6 போலிஸாரை கொன்றனர் Read More »

Share

காஷ்மீரில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் : பாதுகாப்பு படையினர் பலர் காயம்

காஷ்மீரில்  4 மணி நேரத்தினுள் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் 13 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் வடக்குக் காஷ்மீரில் 5 தாக்குதல்களையும் தெற்கு காஷ்மீரில் ஒரு தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

Share

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டு கொலை : பதற்றம்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள டிரால் நகரில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதலின் போது புர்ஹான் வானியின் நெருங்கிய கூட்டாளியும், தீவிரவாத குழுவின் மூத்த தளபதியுமான சப்ஸார் பட் உள்பட 8 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சனிக்கிழமை அதிகாலை தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் காவல் வளையத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ”முதற்கட்ட சண்டையில் சப்ஸார் உள்பட குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று மூத்த காவல்துறை …

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டு கொலை : பதற்றம் Read More »

Share

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் காஷ்மீர் மக்கள் பீதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லையில் விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.  பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறல் இன்றும் தொடர்வதால் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மஞ்சகோட் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தான் ராணுவத்தில் தொடர் தாக்குததால் எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு மாத காலம் இணையதள தொடர்பு நிறுத்தம்: மாநில அரசு அறிவிப்பு

ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு மாத காலத்திற்கு இணையதள தொடர்பு வசதி நிறுத்திவைக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பிடிக்கும் முயற்சியிலோ அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் முயற்சியிலோ பாதுகாப்பு படையினர் ஈடுபடும்போது காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள இளைஞர்கள் பலர் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு பாதுகாப்பு படையினர் மீது கல்வீ்சி தாக்குகின்றனர். மேலும் சமீபத்தில் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது இளைஞர்கள் வன்முறை, தீவைப்பு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற …

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு மாத காலம் இணையதள தொடர்பு நிறுத்தம்: மாநில அரசு அறிவிப்பு Read More »

Share
Scroll to Top