ரூ.20 கோடி மோசடி புகார்: போலியான குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்துகின்றனர் தீபா குற்றச்சாட்டு
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தனது பேரவையை முறையாக பதிவு செய்ய தவறிவிட்டார் என்றும், பேரவை பதிவு செய்துவிட்டதாக கூறி உறுப்பினர் விண்ணப்பங்களை விற்பனை செய்த வகையில் ரூ.20 கோடி மோசடி செய்துள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் தீபா பேரவையை சேர்ந்த நெசப்பாக்கம் ஜானகிராமன் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசில் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தார். இந்தநிலையில் மேற்கு மாம்பலம் போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சென்னை தியாகராயநகர் …