இலங்கை நிலச்சரிவுகளில் 180 பேர் பலி
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன. மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிந்திய தகவல்களின் அடிப்படையில் 180 ஆக அதிகரித்துள்ளது. 110 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். மேலும் 109 பேர் காயமுற்றுள்ளனர் . இதே வேளை வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் நீர் மட்டம் குறைந்திருந்தாலும். இருப்பிடங்களை …