இந்திய ஜனாதிபதி தேர்தல்

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை

இந்திய ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார். இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, …

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை Read More »

Share

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் …

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு Read More »

Share

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக …

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு Read More »

Share

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு Read More »

Share

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக  மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும்  மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை …

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார் Read More »

Share

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு

அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் தெரிவு செய்யப்பட்டார். தலித் தலைவராக இருந்த ஜக ஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகராகவும் இருந்த மீரா குமாரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தனர். முன்னதாக, பாரதீய ஜனதாவும் அதன் தோழமைக் கட்சிகளும் பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தன. ராம்நாத் கோவிந்தும் ஒரு தலித் தலைவரே. தமிழக …

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு Read More »

Share

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். …

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு Read More »

Share

ஜனாதிபதி பதவிக்கு எதிர்கட்சிகளின் வேட்பாளர்

புதுடெல்லி: ஜனாதிபதி பதவிக்கு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதில் சரத்பவார், மீரா குமார், சரத் யாதவ், கோபால் காந்தி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலையில் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பாஜ.வுக்கு எதிராக இந்த தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன.இதுதொடர்பாக பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியை, சமீபகாலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருக்கும் சோனியா, வீடு திரும்பியதும் அவருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்க்கட்சிகளின் சார்பில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு தலைவரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று அதன் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பெயர்கள் கோரப்பட்டு, அதில் தற்போது 4 தலைவர்களின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக, மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஜனாதிபதி பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மேற்குவங்க மாநில முன்னாள் கவர்னர் கோபால் காந்தி ஆகிய 4 பேரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இதில் இருந்து ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம். விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

Share
Scroll to Top