இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து, இன்று கும்ப்ளே பதவி விலகினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் கும்ப்ளே செல்லவில்லை. சமீபத்தில் லண்டனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கமிட்டி கூடியபோது கோஹ்லி நேரில் ஆஜராகி, கும்ப்ளே குறித்து புகார் கூறினார். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிபோட்டியின்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் உச்சத்தைஅடைந்ததாக கூறப்படுகிறது. …

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகல் Read More »

Share