Latest Posts
Aug 12, 2017
தம்மை விரும்பாதவர்களைப் பின் தொடர்ந்து சென்று, எப்படியாவது அவர்களைத் தம்மை விரும்பச் செய்யுமாறு மாற்றிவிடலாம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பமான உறவு, தனது ஒரு கையால் கல்லை எடுத்து இன்னொரு கையை அடித்துப் போக்கிக் கொள்வது போலாகும்.
தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
நாலடியார் : பாடல்-336
உரை:
நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, ‘அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்’ என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு.
Read More →Aug 10, 2017
மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், 85% இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மதுரை ஐக்கோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவர்களின் மனுவை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடை காலத் தடை விதித்தது.
Read More →Aug 10, 2017
அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.
Read More →Aug 10, 2017
இந்தியா உள்ளிட்ட 80 நாட்டினருக்கு விசா இல்லாமல் நாட்டினுள் நுழையும் திட்டம் தொடர்பான அறிவிப்பை கத்தார் வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பையை நடத்த இருக்கின்ற, எரி வாயு அதிகமாக உற்பத்தி செய்யும், கத்தார் நாட்டிற்கு ஐரோப்பா, மற்றும் பிற நாடுகளான இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள், இங்கு வந்து சேர்ந்ததும் சுற்றுலா விசாக்களைப் பெறுவார்கள்.
இந்த விசா விலக்கு திட்டம் கத்தார் நாட்டை அப்பிராந்தியத்தின் மிகவும் திறந்த வெளிநாடாகச் செய்யும் என்று கத்தார் சுற்றுலா ஆணையத்தின் தலைமை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரியான சான் அல்-இப்ராஹிம், டோஹாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Read More →Aug 9, 2017
சீனாவின் தென்மேற்கு – சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.0 ரிச்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை வந்த தகவல்களின்படி 19 பேர் இறந்திருப்பதாகவும், 247 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சீனாவின் சிசுவான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சுமார் 106 அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 1.3 லட்ச வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுகத்தில் பலியானவர்களில் சிலர் வெளிநாட்டு பயணிகளும் உள்ளனர். மேலும் 100 பயணிகள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Read More →Aug 9, 2017
அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுஎஸ் விமானப்படை B-1B லான்சர் கயாம் நோக்கி செல்லும் வழியில், ஜப்பானிலுள்ள கியூஷூவில் எரிபொருள் நிரப்புகிறது. ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Read More →Aug 9, 2017
குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்டார். இருந்த 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றிக்கு தேவையான 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க., காங்கிரஸ் இடையேயான கவுரவ யுத்தத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அகமது படேலின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Read More →Aug 8, 2017
இன்று ராஜ்யசபாவில் இரண்டு வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர். காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் பேசியதாவது: மத்திய அரசு ஏன் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எடுத்தது ஏன் என இப்போது தான் எங்களுக்கு தெரியவருகிறது. ரிசர்வ் வங்கி இரண்டு விதமான ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. இதன் வடிவம் மற்றும் அமைப்பு வெவ்வேறாக உள்ளது.
Read More →Aug 7, 2017
காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது.
Read More →Aug 7, 2017
மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான ஆஷா சஹானி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த கட்டிடத்திலுள்ள 10 – வது மாடியிலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த தளத்திலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களும் சஹானி குடும்பத்தினருக்குச் சொந்தமானதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு அடிக்கடி செல்வதில்லை எனத் தெரிகிறது.
ஆஷாவின் மகன் ரிதுராஜ் சஹானி, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இவர் வீட்டின் கதவினை தட்டியுள்ளார், ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து, பூட்டு சரி செய்பவரை அழைத்து வந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கதவினை திறந்து உள்ளே சென்றபோது மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடொன்று கிடந்துள்ளது.
Read More →