Latest Posts

நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர் அதனை மனத்தில் கொள்ளார்

Aug 19, 2017

இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. -நாலடியார் # 227 விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர். Lord of the cool land where the waters brightly shine! the good will not look upon the faults of others after mixing with them (in friendship), though they act disagreeably.

Read More →

புற்றுநோயைக் குணமாக்கும் தாவரங்கள்: 2

Aug 19, 2017

புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில் இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர். எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse). ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார். எஸ்ஸியக் தேநீர் நான்கு தாவர பொருட்களின் கலவையை கொண்டுள்ளது: 1) ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி ஷீப் சொறல் 2) பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (slippery elm bark)

Read More →

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல்: பாதசாரிகள் மீது வேனை மோதி 12 பேர் பலி

Aug 17, 2017

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் சாலையின் நிழல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது வேனை மோதியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஐஸிஸ் ( ISIS) இத்தாக்குதலை தாம் செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், போலீசார் இதனை தீவிரவாத தாக்குதலாகவே கருதுவதாக தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் மரங்களின் நிழல் சூழ்ந்த பாதசாரிகள் செல்லும் பக்கவாட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக வாகனத்தை ஓட்டியதில் பலர் இறந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்ததையொட்டி அங்கு கடும் பதற்றமான நிலை நிலவியது. முன்னதாக 13 பேர் இறந்தாக தெரிவிக்கப் பட்டிருந்தாலும், பின்னர் 12 பேர் இறந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More →

லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா

Aug 16, 2017

இந்திய சுதந்திர தினத்தன்று, லடாக் பாங்கோங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. இது குறித்து சீன அரசுக்குத் புகார் அளிக்கப் பட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது. நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுத்தனர். மனித சங்கிலி அமைத்து அரண்போல நின்று கொண்டு இந்திய வீரர்கள், சீன வீரர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ விடாமல் தடுத்தனர்.

Read More →

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது

Aug 15, 2017

அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம் பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது. இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More →

இந்தியாவின் 71 - ம் சுதந்திர தினம்: பிரதமர் மோடி கொடியேற்றி உரை

Aug 15, 2017

இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழா டெல்லியில் சிறப்பாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. “1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தியதி” என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், “நமது நாட்டின் உதய நாள்” என்றால் சொன்னால் அது மிகையாகாது. இதனை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது : “வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். உத்தரபிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது, எல்லைப் பகுதியில் நீடிக்கும் சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை கடந்து, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

Read More →

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

Aug 14, 2017

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அமையும் என்ற நிலை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஓராண்டு விலக்கு பெற, அவசர சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

Read More →

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

Aug 13, 2017

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் என்பது என்ன ? உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது.

Read More →

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5 - ம் தேதி நடைபெறும்

Aug 12, 2017

மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா, மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி பத்திரிகை துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து, சென்னையில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆகஸ்டு 10 (வியாழன்) அன்று நிகழ்ந்த பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்களும், ஊடகவியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஆகஸ்டு 11 – வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.

Read More →

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ?

Aug 12, 2017

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததன் நிமித்தம், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் செய்திகளில் அடிபடும் ஒன்றாக விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெரிந்த பின்னரும் மருத்துவமனை அதிகாரிகள் கூடுதலான ஆக்ஸிஜனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »