இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம்

இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இனயத்தில் வர்த்தக துறைமுகத்துக்கு பதிலாக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் …

இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் Read More »

Share

இந்தோ-பங்களா பேச்சுவார்த்தை: தில்லி, டாக்கா பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்து

சீனா வங்காளத்துடன் $25 பில்லியன் மதிப்புடைய 27 ஒப்பந்தங்களை செய்துகொண்ட ஆறு மாதங்களின் பின்னர், புது தில்லி சனிக்கிழமை டாக்காவுடன் நான்கு புரிந்துணர்வு  பாதுகாப்பு உடன்படிக்கைகளை (MoUs) கையெழுத்திட்டது. இதன்மூலம் முதல்முறையாக இந்தியா $500 மில்லியன் கடனாக வங்காளத்திற்கு இராணுவத் தளவாடங்கள் வாங்க வழங்க உள்ளது.    

Share

நமது திரைப்படங்களில் ஈவ் டீசிங்கிலேயே காதல் தொடங்குகிறது: மேனகா காந்தி

கோவாவின் பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை மந்திரி மேனகா காந்தி, கடந்த 50 வருடங்களில் நீங்கள் திரைப்படங்களை கவனித்தீர்களானால்… காதல் ஆனது ஏறக்குறைய எப்பொழுதும் ஈவ் டீசிங்கில் இருந்து ஆரம்பிக்கிறது.  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிசார் திரைப்படங்களை பற்றி நான் பேசி கொண்டிருக்கிறேன். ஒரு நபரும் மற்றும் அவரது நண்பர்களும் ஒரு பெண்ணை சுற்றி வருவர்.  முறையற்ற வகையில் அந்நபர் பெண்ணை சீண்டுவதும், …

நமது திரைப்படங்களில் ஈவ் டீசிங்கிலேயே காதல் தொடங்குகிறது: மேனகா காந்தி Read More »

Share

தில்லி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற அய்யாகண்ணு கைது

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற்தால், விவசாயி அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார். அவர் உட்பட 15 விவசாயிகளை தில்லி போலிஸ் கைது செய்தது. பிறகு, அய்யாகண்ணுவுடன் போராடிய 15 விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் விடுவிக்கப் பட்டனர். அய்யாகண்ணுவிடம் தில்லி நாடாளுமன்ற வீதி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Share

விவசாயக் கடன் தள்ளுபடி கூடாது: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  ரூ 36,359-கோடி விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்த இரண்டு நாட்களில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜிட் படேல் வியாழக்கிழமை அத்தகைய நடவடிக்கை “நேர்மையான கடன் கலாச்சாரத்தை குறைத்து மதிப்பிடுவதாக” மற்றும் “தேசிய சமநிலையைப் பாதிக்கிறது” என்றும் கூறினார்.

Share

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட விக்ரம் பத்ரா, தனது பணியை நேற்று தொடங்கினார். பணப் பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் ரோந்து செல்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ கத்தின் …

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை Read More »

Share
Scroll to Top