Latest Posts
Apr 29, 2017
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2015–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 20–ந்தேதி பிறப்பித்த உத்தரவில், மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்ட தலைநகரங்களிலும் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Read More →Apr 28, 2017
மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிடுவோம் என்று மார்தட்டிய வடகொரியாவிடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள் உண்மையானவை இல்லை என்றும் அவை வெறும் டம்மி ஆயுதங்கள் என்பதை அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களுடன் கண்டு பிடித்துள்ளது. எனவே வடகொரியாவை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வட கொரியாவில் நடைபெற்ற, முன்னாள் அதிபர் கிம் இல் சங்-ன் 105 -ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தின்போது மிக பிரமாண்டமாக பாரியா ராணுவ அணிவகுப்பை அதிபர் கிம் ஜாங் நடத்தினார். அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட அணிவகுப்பாக இது கருதப்பட்டது.
இந்த நிலையில் இந்த அணிவகுப்பு புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ நிபுணர் குழு, அணி வகுப்பில் பல ராணுவ வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது பொம்மை ஆயுதங்கள் என்றும் அவர்களில் பலர் அணிந்திருந்த கண்ணாடி கூட போலி என கண்டறியப்பட்டுள்ளது.
Read More →Apr 28, 2017
கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார்.
கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் மூலம் உதவிய ஒருவரை கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியில் போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read More →Apr 28, 2017
மும்பை, அமர் அக்பர் அந்தோணி, குர்பானி, மேரே அப்னே உள்பட பல இந்திமொழி வெற்றிப்படங்களில் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான வினோத் கண்ணா நேற்று மரணமடைந்தார்.
1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர்.
1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் காலமான வினோத் கன்னாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றர்.
Read More →Apr 28, 2017
தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் வினு சக்ரவர்த்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலமின்றி இருந்து வந்த அவர், வியாழக்கிழமையன்று மாலை 7 மணியளவில் காலமானார்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கன்னட பதிப்பான பரசக்கே கண்டதிம்ம படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வினு சக்கரவர்த்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 1002 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கோபுரங்கள் சாய்வதில்லை, மண் வாசனை ஆகிய படங்கள் இவரது திரையுலக வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தன.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த முனி திரைப்படம் இவரது 1000வது திரைப்படமாகும்.
Read More →Apr 27, 2017
அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது.
தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.
தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
வடகொரியா இன்னும் கூடுதலாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற அச்சங்களுக்கிடையில், அமெரிக்கா சமீப நாட்களில் கொரிய தீபகற்பப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது.
Read More →Apr 27, 2017
கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நடைபெற்ற டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் வசமுள்ளது.
டெல்லியின் மூன்று மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
Read More →Apr 27, 2017
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட தூதுக்குழு ஒன்றும் வந்துள்ளது.
டெல்லி தாஜ்பேலஸ் ஓட்டலில் அவரை நேற்று காலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து ரனில் விக்ரம சிங்கேயும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் இல்லத்துக்கு சென்றார். அங்கு வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயை அவர் வரவேற்றார். இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
Read More →Apr 27, 2017
ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு மாத காலத்திற்கு இணையதள தொடர்பு வசதி நிறுத்திவைக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பிடிக்கும் முயற்சியிலோ அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் முயற்சியிலோ பாதுகாப்பு படையினர் ஈடுபடும்போது காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ள இளைஞர்கள் பலர் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு பாதுகாப்பு படையினர் மீது கல்வீ்சி தாக்குகின்றனர். மேலும் சமீபத்தில் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது இளைஞர்கள் வன்முறை, தீவைப்பு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடைத்தேர்தலில் வெறும் 7.13 சதவீத வாக்குகளே பதிவாகின. இதற்கு முன்பு இந்த மாதிரி மோசமான வாக்குப்பதிவு இருந்ததில்லை.
Read More →Apr 26, 2017
அமெரிக்க தற்காப்புவாதக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், உலகம் முழுதும் உள்ள திறமைகளின் பங்களிப்பின்றி ஆப்பிள், ஐபிஎம் நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூயார்க்கில் சொற்பொழிவாற்றிய பிறகு உர்ஜித் படேல் கூறியதாவது:
உலகின் மிகத்திறமை வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் உலகெங்கிலும் வந்து பங்களிப்பு செய்த திறமைகள் இன்றி உயர்ந்திருக்க முடியுமா?
உலகத்திறமைகளின் பங்களிப்பு இல்லாமல் ஆப்பிள் எங்கிருந்திருக்கும்? சிஸ்கோ எங்கு இருந்திருக்கும்? ஐபிஎம் எங்கு இருந்திருக்கும்? இதற்குத் தடை ஏற்படும் விதமாக கொள்கைகள் வகுக்கப்பட்டால், தற்காப்புவாதக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தால் ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் காரணிகளே அதிகம் பாதிக்கப்படும்.
Read More →