Latest Posts
May 4, 2017
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
Read More →May 4, 2017
நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இரு நீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாட்டின் மனசாட்சியை உலுக்கியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது ஆண் நன்பருடன் பேருந்தில் பயணம் செய்த நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
Read More →May 4, 2017
(தினத்தந்தி)
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.
Read More →May 4, 2017
(கீதா பாண்டே | பிபிசி செய்தியாளர்)
இதற்கு முன்பு எப்போதுமில்லாத நெருக்கடிக்கு மத்தியில் இந்திய நீதித்துறை தற்போது உள்ளது.
கடந்த பல மாதங்களாக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை சேர்ந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணனுக்கும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உண்டாகியுள்ளது.
திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு அரசாங்க மருத்துவர்களைக் கொண்டு மனநலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டதும் இப்பிரச்சனை மேலும் தீவிரமானது.
இதனால் கோபமுற்ற நீதிபதி கர்ணன், இதே போன்ற மனநலப் பரிசோதனைகளை மேற்கண்ட 7 நீதிபதிகளுக்கும் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Read More →May 4, 2017
டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சில சுவாரஸ்யங்கள்:
► குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த போட்டியில் 43 பந்துகளுக்கு 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை எடுத்ததன் மூலம் தனது 5 ஆயிரம்(5,059) ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். 5066 ரன்களுடன் பெங்களூரு அணியின் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
► டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங்கில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது. அதில் ரிசப் பேண்ட் -9 சிக்சர்களும், சாம்சனின் 7 சிக்சர்களும் ஷ்ரெயாசின் 2 சிக்சர்களும், ஆண்டர்சனின் 2 சிக்சர்களும் அடக்கம்.
Read More →May 3, 2017
அமெரிக்க ராணுவப் புகைப்படக் கலைஞர் ஒருவர் , ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு ஆஃப்கானியர்களுடன் கொல்லப்பட்டார். அவர் தனது மரண தருணத்தை தானே எடுத்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. 2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த நான்கு படையினர் பலியானார்கள். புகைப்பட இதழியல் குறித்து கிளேய்டன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆஃப்கனிஸ்தானை சேர்ந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருந்தது.
பலியானவர்களில் அவரும் ஒருவர். கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த விபத்து ஏற்பட்டது.
Read More →May 3, 2017
https://www.facebook.com/jacksonodohertyvideos/videos/1105857342892770/
Read More →May 3, 2017
https://www.facebook.com/itamilrationalists/videos/1414158755312134/
கீழடியை முடக்க பா.ஜ.க துடிப்பதற்கு காரணம் இது தான். இனியும் தமிழினம் ஏமாறக்கூடாது! கீழடியில் நடக்கும் அரசியல் பற்றிய எழுத்தாளர் வெங்கடேசனின் இந்த பேச்சை அவசியம் கேளுங்கள்.
Read More →May 3, 2017
(தினபூமி)
தெலுங்கானா போலீசார் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விமர்சனம் செய்திருப்பதற்கு அந்த மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கட்சியின் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங் தெலுங்கானா அரசு மீது புகார் கூறியுள்ளார். முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கும் வகையில் தெலுங்கானா மாநில போலீசார் போலி ஐஎஸ்ஐஎஸ். வெப்சைட்டை உருவாக்கியுள்ளனர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு அந்த மாநில அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு திக்விஜய் சிங் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது புகாரை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
Read More →May 3, 2017
(பி.பி.சி. தமிழ்)
தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.
வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.
சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக பதிலளித்தது. மேலும், அமெரிக்கா ஓர் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் னை சரியான தருணத்தில் சந்தித்தால் பெருமைப்படுவேன் என்று கூறிய அடுத்த நாள் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Read More →