உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்
Chicken Bottled Salad Dressing Non Diary Creamer Ice cream Potato Chips </div>
Read More →Chicken Bottled Salad Dressing Non Diary Creamer Ice cream Potato Chips </div>
Read More →நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் பிளஸ்–2 படிப்பு முடித்த மாணவர்கள் 2017–2018–ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு, நடப்பாண்டு முதல் ‘நீட் நுழைவு தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு இன்று நாடு முழுவதும் உள்ள 104 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடக்கிறது.
Read More →இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். முதலில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றிய பின்னர் தனது ஒலிபரப்புத்துறை வாழ்க்கையை ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார்.
Read More →தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ளவர்களே, பல்வேறு விசாரணை வளையங்களில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இன்னிலையில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் கொலையும், கொள்ளையும் நடந் துள்ளது. அதன் பின்னணி மர்மங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், அதில் சம்பந்தப் பட்டவர்களின் மரணங்களும் தொடர்கின்றன.
Read More →கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி திரையிலிருந்து 20 வினாடி இடைவெளி கருப்புக் கண்ணாடி (sunglasses) பாதுகாப்புக் கண்ணாடி அணியுங்கள் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம் காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்டுங்கள் நலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள் லேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள் உடல்நல வரலாற்றைக் கண்டுபிடியுங்கள் பழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் புகைப்பதை நிறுத்துங்கள் </div> கணினியின் திரையிலிருந்து 20 வினாடி இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள் கருப்புக் கண்ணாடி (sunglasses) அணியுங்கள் வேலைசெய்யும் இடத்திலும் சில விளையாட்டுக்களின் போதும் பாதுகாப்புக் கண்ணாடி அணியுங்கள் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம் காண்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்டுங்கள் இதயத்திற்கும் கண்களுக்கும் நலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள் மருந்து லேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள் உங்கள் உடல்நல வரலாற்றைக் கண்டுபிடியுங்கள் பழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள் தவணை மாறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் புகைப்பதை நிறுத்துங்கள்
Read More →சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க கட்டடம் 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக, வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர் ஆணையராக இளங்கோ என்பவரை நியமித்து உத்தரவிட்டனர்.
Read More →பாகுபலி 2-ம் பாகம் உலக அளவில் இந்திய சினிமா கண்டிராத மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் 28-ம் தேதிக்கு திரைக்கு வந்த இந்த படம் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 4000 திரையரங்குகளில் பாகுபலி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. பாகுபலி வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் 680 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனிடையே பாகுபலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Read More →