Latest Posts
May 20, 2017
இத்தாலியில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா – பப்லோ குயேவாஸ் ஜோடி போராடி தோல்வி கண்டு வெளியேறியது. இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் போபண்ணா- உருகுவேயின் பப்லோ குயேவாஸ் ஜோடி, பிரான்சின் பியரே-ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் – நிகோலஸ் மஹட் ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது.
இந்தப் போட்டியில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் மூன்று செட்டுகளும் ‘டைபிரேக்கர்’ வரை சென்றன.
முதல் செட் டைபிரேக்கரில் போபண்ணா ஜோடி 5-7 என தோல்வியடைந்தது. ஆனால், 2-வது செட் டை பிரேக்கரில் 7-2 வெற்றி பெற்றது.
Read More →May 20, 2017
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மீன்ராஜ் என்பவரது மகள் சுபஸ்ரீ. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து 8ம் வகுப்பு செல்லும் சுபஸ்ரீ, சிறு வயதிலிருந்தே ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதையறிந்த இவரது பெற்றோர் சாத்தூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இவரை சேர்த்து பயிற்சி அளித்தனர்.
அங்கு 2 ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ, பின்னர் கோத்தகிரியில் உள்ள பள்ளியில் பயின்றபோது 4 ஆண்டுகள் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் சுபஸ்ரீ மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
Read More →May 20, 2017
காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெட்டிப்பாயைத்தில் 7வது நாளாக ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்பு குழுவினர் கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-வது நாளான இன்று, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சை சாலியமங்கம் ரயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read More →May 20, 2017
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை எதிர்கொள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
Read More →May 20, 2017
இமயமலையிலுள்ள பிரபலமான கோயிலான பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள் பிளவுபட்டுள்ளதால் 15 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த கோயிலுக்கு செல்லும் வழியான விஷ்ணுபிரயாக் என்னும் இடத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாதி வழியில் மக்கள் நிற்பதாகவும், ஜோஷிமுட் முதல் பத்ரிநாத் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாவட்ட நிர்வாகம் மாற்றம் பேரிடர் மேலாண்மை குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜே சி பி இயந்திரங்களை கொண்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
Read More →May 20, 2017
ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக தற்போதைய அதிபர் ஹசன் ரூஹானி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தேர்தலில் பதிவான சுமார் 40 மில்லியன் வாக்குகளில், இதுவரை எண்ணப்பட்டதில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ரூஹானி பெற்றுள்ளதாகவும், சில பகுதிகளில் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தொலைக்காட்சியில் அறிவித்தனர்.
மிதவாத தலைவராக அறியப்படும் ரூஹானி உலக முன்னணி நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி இரானின் அணு திட்டங்களை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டார்.
ரூஹானியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையங்களில் ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்று ரூஹானியின் பழமைவாத போட்டியாளரான இப்ராகிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More →May 19, 2017
மீளாய்வு விண்ணப்பத்தையடுத்து, முள்ளிவாய்க்கால் கிறிஸ்தவ ஆலயத்தின் உள்ளே நினைவேந்தல் நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் தேவாலய வளவில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்துவதுடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக காவல்துறையினரால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையுத்தரவு தொடர்பில் வடக்கு கிழக்கு பிரதேச சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர் எழில்ராஜன் சார்பில் வியாழனன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனு ஒன்றைப் பரிசீலனை செய்த நீதிபதி, அந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்குள் எவரும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக அந்த ஆலயத்தின் உள்ளே பூஜை செய்யவும், அந்த ஆலய வளவின் ஏனைய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்துபவர்கள் கூடியிருந்து செயற்படலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Read More →May 19, 2017
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.
பிளஸ் 2 தேர்வைப் போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டமே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 பேர் பெற்றனர். 451-ல் இருந்து 480 வரைக்கும் 1,22,77 பேர் பெற்றுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது.
Read More →May 19, 2017
இந்தியாவை சேர்ந்தவர் அதுல்குமார் பாபுபாய் படேல் (58). கடந்த 10-ந்தேதி இவர் ஈகுவேடார் நாட்டில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்கு விமானம் மூலம் வந்தார்.
அவரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் நுழைவதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே அவரை கைது செய்தனர்.
இதில் தேவையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருந்தது தெரியவந்தை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, நர்ஸ் ஒருவர் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.
Read More →May 19, 2017
ரஜினிகாந்த் கடந்த மே 15ஆம் தேதி முதல் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். முதல் நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார் ரஜினி. அதற்குப் பிறகு, இன்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் பேசினார் ரஜினிகாந்த்.
கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் தான், பச்சைத் தமிழன்தான் என்றும் தமக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த எதிர்ப்புகளின் மூலம் உதவிக்கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
“முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில், அரசியலுக்கு வருவது குறித்து நான் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகின. எதிர்ப்புகள் இருக்க வேண்டியதுதான்.
Read More →