Latest Posts
May 21, 2017
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கனவு பலிக்காது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுப்பட்டுள்ளார் என அவர் கூரினார்.
Read More →May 21, 2017
Read More →May 21, 2017
Read More →May 21, 2017
Read More →May 21, 2017
Read More →May 20, 2017
அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜம்தான் என்ற இமாச்சல பிரதேச முதல்வர் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் வீரபத்ர சிங் பேசுகையில், அதிக மக்கள் தொகை இருக்கும் மாநிலத்தில் மக்கள் பன்றி காய்ச்சலால் இறப்பது சகஜமான ஒன்றுதான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மாநிலத்தின் எதிர்கட்சியான பாஜ, முதல்வரின் இந்த பேச்சை கண்டித்துள்ளது.
இதுகுறித்து பாஜ எம்பி அனுராக் தாகூர் கூறுகையில், முதல்வர் வீரபத்ரசிங்கின் இந்த பேச்சு முதிர்ச்சியற்றதும், மனிதாபிமானமில்லாததுமான பேச்சாகும்.
Read More →May 20, 2017
உத்திரபிரதேசத்தில் லோகமான்யா திலக் அதிவிரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உன்னாவு ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புண்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை இந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More →May 20, 2017
Read More →May 20, 2017
உலகக்கோப்பை கால்பந்தில் பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான இத்தாலி அணியுடன் இளம் இந்திய அணி நேற்று முன்தினம் மோதியது. அரிஸோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அபிஜித் சர்கார் 31-வது நிமிடத்திலும், ராகுல் பிரவீன் 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.
8-வது நிமிடத்தில் கோமல் தாட்டல், இத்தாலி வீரர்களுக்கு போக்குக்காட்டி பந்தை வேகமாக முன்னெடுத்துச் சென்றார். ஆனால் கோல் அடிக்கும் அவரது முயற் சிக்கு பலன் கிடைக்கவில்லை.
Read More →May 20, 2017
“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி” என்று நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியல் வரபோவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு. அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறித்து பதிவிட்ட்டுள்ளார். அதில் அவர் கூறியதவது:- நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. மேலும் போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது என்று பதிவிட்டார்.
Read More →