Latest Posts

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை

May 25, 2017

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில் தேர்வு நடந்தது. சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் ஜூன் 7 ம் தேதி தங்கள் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். சீரான கேள்வித்தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், ஆங்கில மற்றும் தமிழ் கேள்வித் தாள்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறினர்.

Read More →

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிசுடன் சந்திப்பு

May 24, 2017

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கும் போப் பிரான்சிசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில் இன்று முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட டிரம்ப், முதல் பயணமாக சவூதி அரேபியா சென்றார். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் தற்போது ஐரோப்பிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். போப் பிரான்சிஸும் டிரம்பும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள் தடையற்ற முதலாளித்துவம் ஆகிய விவகரங்களில் டிரம்ப்- போப் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது.

Read More →

மான்செஸ்டர் : மேலும் 3 பேர் கைது; பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு

May 24, 2017

பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள அதிகாரிகள், புதன்கிழமை மேலும் மூன்று பேரை கைது செய்தனர். திங்கள் அன்று, அரியானா கிராண்டே கச்சேரியில் நடந்த தற்கொலை குண்டுவீச்சிற்கு பின்னர், பல சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் இனிவரும் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தும் வகையில் செயல் படுகின்றன. குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சல்மான் அபேடி ஒரு லிபிய குடும்பத்தில் பிரிட்டனில் பிறந்தவர்; மான்செஸ்டர் தெற்கு புறநகர் பகுதியில் வளர்ந்தார். மேலும் உள்ளூர் சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். போலிஸ் அவரது வீட்டை சோதனை செய்தனர். அண்டை வீட்டுக்காரர்கள் அவரை ஒரு உயரமான, மெல்லிய இளைஞனாக நினைவு கூர்ந்தனர். அவர் பெரும்பாலும் பாரம்பரிய இஸ்லாமிய உடை அணிந்திருந்ததாகவும், அதிகம் பேசமாட்டார் எனவும் தெரிவித்தனர்.

Read More →

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

May 24, 2017

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

Read More →

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

May 24, 2017

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் போட்டித்தொடரில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 19 வயதான தீப்தி சர்மா அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக மட்டை வீசினார். முதல் விக்கெட்டாக களம் இறங்கிய தீப்தி ஷர்மாவும், பூனம் ராவத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இருவரும் இணைந்து 320 ரன்களை குவித்தனர். தீப்தி 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு, ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி தகுதிபெற்றது. அதைத் தொடர்ந்து சில வாரங்களில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சிறப்[பை ஜூலன் கோஸ்வாமி பெற்றார்.

Read More →

சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட்

May 23, 2017

நடிகர்கள் சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் ஒன்றை நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது. தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அவ்வாறு உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் தொடுத்திருந்த வழக்கு, நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில்தான் இன்றைய உத்தரவும் வெளிவந்துள்ளது.

Read More →

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

May 23, 2017

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராந்தெயின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார். ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

Read More →

மான்செஸ்டரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : அரியானா கிராந்தெ கலை நிகழ்ச்சியில் குண்டுவெடித்து 19 பேர் மரணம்; 50 பேர் காயம்

May 23, 2017

பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியானா கிராந்தெயின் கலை நிகழ்ச்சியில் தற்கொலைத் தீவிரவாதியால் குண்டுவெடித்து 19 பேர் மரணமும் 50 பேர் காயமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் போலீஸார் இதனை பயங்கரவாத தாக்குதல் என விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Read More →

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட ஹிலாரி ஸ்டெப் அழிந்துவிட்டது

May 22, 2017

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட ஹிலாரி ஸ்டெப் அழிந்துவிட்டது. இதன் காரணத்தால் உலகிலேயே மிக உயரமான மலை இனிவரும் காலங்களில் மலை ஏறுபவர்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறலாம். கிட்டத்தட்ட செங்குத்தாக இருக்கும் இந்த 12மீ பாறை அமைப்புக்கு எவரெஸ்ட் சிகரத்தை 1953-ம் ஆண்டு முதன் முதலில் எட்டிய எட்மண்ட் ஹிலாரியின் பெயர் சூட்டப்பட்டு ‘ஹிலாரி ஸ்டெப்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்திலிருந்த ஹிலாரி முனை சேதமடைந்திருக்கலாம் என்று மலை ஏறுபவர்கள் கூறுகின்றனர். மலையில் தென்கிழக்கு முனையில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு பாறைகள் உடைய பகுதியாக இது இருந்தது.

Read More →

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை

May 22, 2017

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்படுமோ?

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »