Latest Posts
May 28, 2017
பழக்கத்தை மாற்றுவோம்- இதயத்தைக் காப்பாற்றுவோம் அதிகமாக டிவி பார்ப்பவரா அசைவ உணவுப்பிரியரா ஒழுங்கான தூக்கமில்லையா உடலின் எச்சரிக்கைக் குறியீடுகளை அறியாமல் இருக்கிறீர்களா உப்பை சாப்பாட்டில் அதிகமாக சேர்த்துக்கொள்கிறீர்களா எளிதில் உணர்ச்சிவசப்படுபவரா </div>
Read More →May 27, 2017
நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தருணங்களில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக சூசகமான தகவல்களை வெளியிடுவதும், பிறகு அரசியலில் தற்போது இறங்கவில்லை என்பதுவும் நாம் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.
எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர விரும்புகிறார்.
Read More →May 27, 2017
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதற்காக, 1960–ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள், 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்காவிட்டாலும்கூட, சந்தையில் இவற்றை இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதித்திருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Read More →May 27, 2017
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கிறிஸ்துவர்கள் மீதான கொலை தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எகிப்தில் மின்யா மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டது இரக்கமற்ற தாக்குதல். ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
Read More →May 26, 2017
வெள்ளிக்கிழமை (இன்று) கெய்ரோவிற்கு தெற்கே காப்டிக் கிறிஸ்தவர்கள் பயணித்துக் கொண்டிருந்த பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்தனர் என்று எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவித்தது.
எந்தவொரு பயங்கரவாத குழுவும் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் எகிப்திய காப்டிக் கிரிஸ்துவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விருப்பமான இலக்காக இருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐஸிஸ் அமைப்பு வெளியிட்ட ஒரு காணொளியில் “எகிப்திய கிறிஸ்தவர்கள் தங்களுக்கு பிடித்த இரை” என்று கூறியிருந்தனர். டிசம்பர் மாதத்தில் கெய்ரோ தேவாலயத்தில் ஒரு 30 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரின் படத்தை இந்த வீடியோ காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More →May 26, 2017
தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அவ்வாறு நடப்பதாக இருந்தால், நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கி, மக்களிடையே பீதியைக் கிளப்புவதுதான் அமைச்சரின் வேலையா என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆவின் பால் நிறுவனம் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களைப்பற்றி குறை கூறினார்.
தலைநகர் சென்னையில் மட்டும் 50 சதத்துக்கும் மேற்பட்ட பால் தேவையை, தனியார் நிறுவனங்கள் நிறைவேற்றி வரும் நிலையில், தனியார் பாலில் ரசாயனம் கலப்பதால், அவை நோயை உண்டாக்கும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
Read More →May 26, 2017
“அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. சத்தமாகப் பேசி மறுப்பு தெரிவிப்பவர்களின் குரலை மூழ்கடிக்கக் கூடாது” என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.
புது டில்லியில், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அழைப்பின் பேரில் இரண்டாம் ராம்நாத் கோயங்கா விரிவுரையை வழங்குகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கபட வேண்டியது நமது நாட்டைக் காப்பாற்றுவதற்கான அடிப்படையும் உண்மையான ஜனநாயக சமூகத்தின் இயல்புமாகும். ஜனநாயக அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் கேள்விகளைக் கேட்பது நல்லது, ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது என்பதை உணர வேண்டும் என்றும் கூறினார்.
Read More →May 25, 2017
அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்று கூறிய விக்ரமசிங்க, இனவாத செயல்கள் காரணமாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகள் பின்னடைவு காணும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.
சட்டத்தை மீறும் மற்றும் இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போலீசாரின் முக்கிய கடமையென்று கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போலீசார் தனது கடமைகளை பாரபட்சமின்றி நிறைவேற்ற முன்வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Read More →May 25, 2017
தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று வியாழக்கிழமை காலை சிறையிலிருந்து வெளிவந்தார்.
பழிவாங்கும் நோக்கத்திற்காகவே தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் வைகோ குற்றம்சாட்டினார்.
மேலும் தனது கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் தான் தற்போது ஜாமீன் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக வைகோவின் ஜாமீன் கோரும் மனு, நேற்று புதன்கிழமை சென்னை 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால், வைகோவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்தே தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ இன்று காலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
Read More →May 25, 2017
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று லத்தூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். லத்தூர் அருகே சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது. முதல்வருடன் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய அனைவரும் காயங்களின்றி உயிர்பிழைத்துள்ளனர்.
பின்னர் வேறு வாகனம் மூலம் முதலமைச்சரும் அதிகாரிகளும் லத்தூர் சென்றனர். விபத்து குறித்து முதல்வர் பட்நாவிஸ் ட்விட்டரில் “தனக்கும் குழுவினருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை” என்று பதிவு செய்துள்ளார்.
Read More →