Latest Posts

மோடியின் ஆட்சியைப் பற்றி அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்” - ல் வெளியான கவிதை

Jun 3, 2017

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல் ஒரு கவிதை வெளியானது. அது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டபோது அதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் இதைப்பற்றி கூறுகையில் “ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை” என்றார். மோடியின் ஆட்சியைப் பற்றிய அந்த கவிதை :   மோடி அரசின் மூன்றாண்டு ! இது- நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா? இது- சாதனை அரசா? சி.பி.ஐ. சோதனை அரசா?

Read More →

இந்திய, ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

Jun 2, 2017

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையில் மேலும் இரண்டு கூடுதல் அலகுகளை அமைப்பதற்கான உடன்பாடு, இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையே இன்று கையெழுத்தானது. ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. மேலும் இரு “பெரும் சக்திகளுக்கு” இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான “புதிய வழியை” கொடுக்க இரு தரப்பினரும் முடிவு செய்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியபோது, புதிய அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்திய, ரஷ்ய உறவை மேலும் வலுப்படுத்தி யுள்ளது என்று தெரிவித்தார்.  

Read More →

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி ஒத்திவைப்பு

Jun 2, 2017

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4 மற்றும் 5வது தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடித்து தரைமட்டமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை சில்க்ஸில் கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. கடந்த 2 நாள்களாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். இதனிடையே கட்டடத்தின் முகப்பு பகுதியும், 4 மாடிகளும் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டது. இந்நிலையில் மீதமுள்ள கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் உள்ளதால் எஞ்சிய கட்டடத்தையும் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Read More →

பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியேறியது

Jun 2, 2017

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வியாழனன்று தன்னுடைய நிர்வாகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்தார். “பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிக மிக நியாயமற்றது. ஆகவே நாம் வெளியேறுகிறோம்”, என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் முடிவு அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதியை பூர்த்தி செய்வதுடன், குடியரசு கட்சியினரின் உலகளாவிய காலநிலை ஒப்பந்த எதிர்ப்பினை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் உடன்பாட்டின் விமர்சகர்கள் அது பொருளாதாரத்தைப் பாதிக்குமென வாதிடுகின்றனர், ஆனால் ஆதரவாளர்கள் அது எதிர்காலத்தில் புதிதாக வேலைகளை உருவாக்கும் என்று கூறுகிறார்கள். “பாரிஸ் ஒப்பந்தம் நமது பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்; அது நம்மை நிரந்தரமாக அனுகூலமற்ற நிலைக்கு உட்படுத்துகிறது.

Read More →

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

Jun 2, 2017

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட சின்னமான “இரட்டை இலையை” திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனின் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் இருந்தனர். சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி இவ்விருவரின் ஜாமீன் மனுவை விசாரித்து, இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

Read More →

கோரிக்கைக்களுக்கு ஒத்துழைத்தால் இரு அணிகளும் இணைவதில் நிபந்தனைகள் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

Jun 1, 2017

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கம்பத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது : கடந்த 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாதுகாத்து வந்தனர். எந்தவொரு தனிக்குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சி சென்றுவிடக்கூடாது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களின் அந்த நோக்கத்தை பின்பற்றியே நானும் எனது ஆதரவாளர்களும் செயல்பட்டு வருகிறோம். மேலும் அ.தி.மு.க. எந்தவொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே தர்மயுத்தத்தையும் தொடங்கினோம். எங்களின் நோக்கத்து சசிகலா அணியினர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் இணைவதில் எந்த நிபந்தனைகளும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read More →

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிவை

Jun 1, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை திரும்பப் பெற வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மற்றும் இதைத் திரும்பப் பெறுதலினால் என்ன நடக்கும் என்பது பற்றி சில தகவல்கள் கீழே காணலாம் : பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் என்றால் என்ன? ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்கா உட்பட ஏறக்குறைய 200 நாடுகள், 2015 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வை தானாக குறைப்பதற்கு ஒப்புக்கொண்டன. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் உமிழ்வு இலக்குகளை தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம். எனினும், இந்த இலக்குகள் அவர்களை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது.

Read More →

ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 6% ஆனது

Jun 1, 2017

மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது சென்ற அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் 7.0 சதவீத வளர்ச்சியைவிட குறைந்துள்ளது. இதற்கு சென்ற ஆண்டு நவம்பரில் துவக்கப்பட்ட பணமதிப்பு நீக்கமே முக்கிய காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா இழந்துவிட்டது. இருப்பினும், 2016-17 நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாக மாறாமல் இருந்தது. இதன் மதிப்பு 7.6 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்தது. நான்காவது காலாண்டில் நிதி சேவைகள் துறை ஒற்றை இலக்க வேகத்தில் வளர்ச்சியுற்ற நிலையில், கட்டுமானத் துறை ஒரு பெரும் சுருக்கத்தை பிரதிபலித்தது.

Read More →

காபூல் குண்டுவெடிப்பு: தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பு, 80 பேர் இறந்தனர், 350 பேர் காயமுற்றனர்

May 31, 2017

புதன்கிழமை காலையில் காபூலின் மிகவும் பாதுகாப்பான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை ஒரு பெரிய வெடிகுண்டு வெடிப்பு உலுக்கியது. குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்டதோடு 350 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் தற்கொலை கார் குண்டுவீச்சினால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்குதல் நடந்த இடத்தின் அருகில் சேதமாகின. “தற்போது இத்தாக்குதலின் இலக்கு எது என்று எமக்குத் தெரியாது, ஆனால் பெரும்பாலும் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் நஜிப் டேனிஷ் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து அரை மைல் வரை கடைகள், உணவகங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

Read More →

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

May 31, 2017

தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் நவீன கருவிகளை கொண்டு புகையை வெளியேற்றி வருகின்றனர். அடர் புகைக்காரணமாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »