Latest Posts

35 வயது நடிகையை காதல் திருமணம் கொண்ட டைரக்டர் வேலுபிரபாகரன்

Jun 3, 2017

புரட்சிகருத்துகளை கூறுவதாக சினிமாபடம் எடுத்த 60 வயது இயக்குனர் வேலுபிரபாகரன் தனது படத்தில் நடித்த 35 வயது நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் என்று கூறிக் கொள்ளும் இவர் நாளைய மனிதன், அதிசயமனிதன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்தவர். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு காதல் கதை என்ற வயது வந்தோருக்கான படத்தை தயாரித்து இயக்கினார் வேலுபிரபாகரன். உலகில் காதல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே உடல் சார்ந்த இனக்கவர்ச்சி மட்டுமே என்றும் அவர் கூறி வந்தார்.

Read More →

செவ்வாய் / பூமி இடையிலான தொடர்பு ?

Jun 3, 2017

மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ வழி இருக்கிறதா என்பது பற்றி பேசும்போது, சிலர் நம் சொந்த சூரியக் குடும்பத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். செவ்வாயில் உயிர்கள் வாழ்கின்றன என்றும் நாசா அதனை மறைப்பதாகவும் சில சதி கோட்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். செவ்வாய் கிரகம் சம்பந்தமான பல புகைப்படங்கள் அங்கே வேறு உயிர்களின் நாகரிகம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றன. இந்த புகைப்படங்களையும் சதி கோட்பாடுகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறினாலும், செவ்வாய் கிரகத்தின் காந்தப்புலம் மறைவதற்கு முன்பு, அதன் மேற்பரப்பில் திரவப் பெருங்கடல்கள் ஒருகாலத்தில் இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். முன்பொரு காலத்தில் உயிர்கள் அங்கே வாழ்ந்தனவா ?

Read More →

வட கொரியா மீதான தடைகள் மேலும் விரிவாக்கப்பட்டன

Jun 3, 2017

வட கொரியா இவ்வாண்டு நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு எதிரான நடவடிக்கையாக, அந்நாட்டின் மீதான தடையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விரிவாக்கியுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. வட கொரிய தலைவரின் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கைகள், பயணத்தடை, நான்கு நிறுவனங்கள் மற்றும் 14 அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இந்த தடையில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் விதிக்கப்படும் இத்தடைகள், ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. வெள்ளியன்று நடைபெற்ற 15 உறுப்பு நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இந்த தடை விதிக்கும் தீர்மானம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

Read More →

விப்ரோ : 2 - வது முறையாக மிரட்டல் மெயில்

Jun 3, 2017

பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாக ரூ.500 கோடி பிட்காயின் கேட்டு மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் 72 மணி நேரத்துக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் அசம்பாவிதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் மிரட்டல் வந்த ஒரு மாதத்துக்குள்ளாக, மீண்டும் இந்த மெயில் வந்துள்ளது. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.பி. முகவரியில் இருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது போலியான முகவரியாகவும் இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 5-ம் தேதியும் அதே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்திருந்தது. அப்போதும் ”ரூ.

Read More →

வருமான வரி சோதனையில் சென்னைக்கு 2வது இடம்

Jun 3, 2017

கடந்த ஆணடு முதல் 2017 பிப்ரவரி வரை நாடு முழுவதும் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனைகளில் கிடைத்த கணக்கில் வராத பண விவகாரத்தில் வட மாநில நகரங்களை விட தென் மாநில நகரங்களே முன்னணியில் உள்ளன. இந்த விஷயத்தில் சென்னைக்கு, இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த, 2016 முதல், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, வருமான வரித்துறை பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. அதில், 14 நகரங்களின் விவரங்கள் மட்டும் தற்போது கிடைத்துள்ளன. அதில், முதல் இடத்தில் பெங்களூரு உள்ளது. கடந்த, 2016ல் சென்னையில், 17 சோதனைகள் நடத்தப்பட்டன. 93.84 கோடி ரூபாய் சிக்கியது.

Read More →

ஷாருக்கான் இறந்ததாக வெளியான போலி செய்தியால் பரபரப்பு

Jun 3, 2017

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, பிரபல ஐரோப்பிய டிவி முக்கிய செய்தி தவறாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாக, ஐரோப்பிய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த ஷாருக்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாக, தனது புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார். அதே சமயம், சில நாட்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்காக போடப்பட்ட அரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தை நினைவுப்படுத்தியவர், இந்த வாரம் தனக்கு சோகமான வாரமாகவே அமைந்துவிட்டது, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More →

அமெரிக்காவில் நடந்த ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய சிறுமி வெற்றி

Jun 3, 2017

அமெரிக்காவில் நடைபெற்ற, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய், 12, முதலிடம் பெற்றார். இவ்வகை போட்டியில், 13-வது முறையாக தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று வருகின்றனர். அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ‘ஸ்பெல்லிங்’ சொல்லும், ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நுாற்றுக் கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 291 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

Read More →

பதிவு செய்யப்பட்ட வரலாற்றின்படி உலகில் மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர் ?!

Jun 3, 2017

பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளின்படி, உலகில் மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர் சீனாவின் லி சிங் யுவென் என்று கருதப்படுகிறார். இவர் 256 வயது வரை உயிர் வாழ்ந்திருந்தார் என கருதப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் ஏடு 1930-ல் வெளியிட்ட ஒரு கட்டுரையின்படி, வு சுங்-சியே என்ற செங்டூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், பண்டைய சீனப் பேரரசின் ஒரு ஆவணத்தைக் கண்டுபிடித்தார். 1827 – ஆம் ஆண்டைச் சார்ந்த அந்த ஆவணத்தின்படி 150 வயதான முதியவர் லி சிங் யுவெனுக்கு அப்போதைய சீன அரசாங்கம் வாழ்த்துதல் தெரிவித்திருக்கிறது. மீண்டும் அவருடைய 200-வது வயதிற்கு அரசாங்கம் வாழ்த்து தெரிவித்த , 1877 – ஆம் ஆண்டைச் சார்ந்த இன்னுமொரு ஆவணமும் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

Read More →

குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, எல்லாம் வெறும் ஊகங்களே : அமெரிக்க தேர்தலில் எவ்வித குறுக்கீடும் இல்லையென மறுக்கிறார் புடின்

Jun 3, 2017

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். “அதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் கூறினார். தூய பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில், விளாடிமிர் புடின் கூறியதாவது : ரஷ்ய தலையீடு குறித்த குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, மிஞ்சுவது வெறும் ஊகங்களேயன்றி வேறெதுவும் இல்லை. இப்பயனற்ற, தீங்கு விளைவிக்கும் வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் அவர் கூறுகையில் “இவ்வதந்திகள் சர்வதேச உறவுகளையும், உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவற்றை சேதப்படுத்தும். நாம் சரியான ஒரு கூட்டணியைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.

Read More →

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்; இன்று உடல் அடக்கம்

Jun 3, 2017

கவிஞரும் தமிழ் பேராசிரியருமான அப்துல் ரகுமான் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 80. இருதய நோய், சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டுவந்த அவர் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில், மூச்சுத் திணறலால் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். மதுரை நகரில் உள்ள சந்தைப்பேட்டையில் சையது அகமது – ஜைனத் பேகம் தம்பதிக்கு 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்த அப்துல் ரகுமான், பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் அந்நகரிலேயே முடித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற இவர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »