Latest Posts

அதிக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே ஒரு இந்தியர்

Jun 9, 2017

உலகில் மிக அதிகமாக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்கள் கொண்ட பட்டியலை FORBES பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். உலகின் மிக உயர்ந்த சம்பளம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியர் 89 வது இடத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி – ரூ.142 கோடி ரூ.19 கோடி ரூபாய் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஊதியம் ரூ.123 கோடி விளம்பரங்களின் மூலம் கிடைத்த வருமானம் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டொ முதலிடம் – ரூ.600 கோடி அமெரிக்காவின் குடைப்பந்து வீரர் லெப்ரான் ஜெம்ஸ் இரண்டாவது இடம் – ரூ 554 கோடி

Read More →

விஜய் டிவி சூப்பர்சிங்ஙர்களுக்கு சொன்னபடி வாய்ப்பு கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா

Jun 9, 2017

திரையுலகத்தில் பலரும் பலருக்கு வாக்கு கொடுப்பார்கள். அடுத்த வாரம் வந்து என்னைப் பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சான்ஸ் உண்டு என்று சொல்வார்கள். அடுத்த வாரம் வந்தால் வாக்கு கொடுத்தவர் உள்ளேயே நுழைய விட மாட்டார். ஆனால், திரையுலகத்தில் சொன்னபடி செய்து காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சிறப்பாகப் பாடும் மூன்று பேருக்கு தான் இசையமைத்து வரும் ‘பலூன்’ படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன் கலந்து கொண்டு பாடிய பிரியங்கா, ரிஸ்வான், பிரியா ஜெர்சன் ஆகியோர் உட்பட பலர் யுவன் முன் பாடினார்கள்.

Read More →

ரைட் சகோதரர்களுக்கு முன்னரே விமானம் தயாரித்து பறந்து காட்டிய இந்தியர்

Jun 9, 2017

விமானத்தை கண்டுபிடித்தவர்கள் என்று போற்றப்படுபவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதர்கள். இவர்கள் 1903ஆம் ஆண்டு தாங்கள் உருவாக்கிய விமானத்தில் பறந்து உலகப் புகழ் அடைந்தனர். ஆனால் இவர்கள் ஆகாயத்தில் விமானத்தில் பறப்பதற்கு 8 ஆண்டுகளுக்குமுன்னரே, விமானம் தயாரித்து அதில் பறந்து காட்டி அசத்தியிருக்கிறார்இந்தியர் ஒருவர். மும்பையைச் சேர்ந்த சிவ்கர் பாபுஜி தல்பேட் என்பவர் சமஸ்கிருதம் மற்றும் வேதங்கள் கற்று அறிந்த சிறந்த அறிஞர் ஆவார். இவர் வேதங்களில் உள்ள பறக்கும் இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டுசுயமாகவே ஒரு விமானம் தயாரித்து அதில் பறந்தும் காட்டியுள்ளார். இதுவேமனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பறக்கும் இயந்திரம் என்று கருதப்படுகிறது. ரைட் சகோதர்கள் ஆகாய விமானத்தில் பறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரேசிவ்கர் பாபுஜி தல்பேட், தான் தயாரித்த விமானத்தில் 1895ஆம் ஆண்டுமும்பையில் உள்ள சொளபதி பகுதியில் பறந்து காட்டியுள்ளார்.

Read More →

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - இலங்கை vs இந்தியா : இந்தியா பேட்டிங்

Jun 8, 2017

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா vs இலங்கை போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

Read More →

ம.பி. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளை சந்திக்கச் சென்ற ராகுல் கைது

Jun 8, 2017

மத்திய பிரதேசம் மாண்ட்சர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தியை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 1-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். மாண்ட்சர் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாண்ட்சர் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி இன்று போபாலில் இருந்து மாண்ட்சர்மாவட்டத்திற்கு பயணம் செய்தார்.

Read More →

இயக்குனர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா

Jun 8, 2017

பிரபல நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா கடந்த வருடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘தேவி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஹிட் ஆகியது. ‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்துள்ளார். இந்நிலையில், சாய் பல்லவி தற்போது நானி ஜோடியாக `ஃபிடா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

Read More →

பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர்

Jun 8, 2017

வரும் ஜூலை மாதம் பாகுபலி 2 சீனாவில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்கள் பிடித்து போக இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வேண்டுமென்று ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். பின் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது. இதையடுத்து அனுஷ்கா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து யாரவது வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கையும் விடுத்தார். தற்போது சீனாவில் பாகுபலி 2 படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தங்கல் திரைப்படம் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

Read More →

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம்

Jun 8, 2017

சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்றெடுக்கப்படும் பதக்கங்களை விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார். வறுமை காரணமாக தான் வென்றெடுத்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயசேகர ஒலிம்பிக் பதக்கம் என்பது சுசந்திக்கா ஜயசிங்கவின் ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல என்று கூறினார். அது நாட்டுக்கு சொந்தமானது என்று கூறிய அமைச்சர் ஜயசேகர, அதனை விற்பனை செய்வதற்கு சுசந்திக்கா ஜெயசிங்கவிட்கு எந்த உரிமையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

Read More →

ஜூலை 17 - ல் ஜனாதிபதி தேர்தல்

Jun 8, 2017

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை ஜூலை 17-ம் தேதி நடத்துவதாக இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.   இத்தேர்தலுக்கான கால அட்டவணை : ஜூன் 14 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய தொடக்க நாள் ஜூன் 28 – வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29 – வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு நாள் ஜூலை 1 – வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 17 – குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் நாள்

Read More →

புற்றுநோயை மரபணு மாற்றம் மூலம் சரி செய்யலாம்

Jun 7, 2017

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ‘மரபணுவை மாற்றும் முறை’ மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர். உடலின் எந்தப் பாகத்தில் வரும் புற்றுநோயாக இருந்தாலும் அதன் முக்கிய கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கக் கூடிய மரபணுவை மாற்றுவது, மேற்கொண்டு புற்றுநோய் கட்டி உருவாவதை தடுக்கும்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »