Latest Posts
Jun 10, 2017
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.
வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் “மலேசியாவுக்கு ஆபத்தானவர்” என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.
Read More →Jun 10, 2017
தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிறப்பித்து உள்ளார்.
தென்சென்னை மாவட்ட தலைவராக கராத்தே தியாகராஜனும், வட சென்னை மாவட்ட தலைவராக எம்.எஸ்.திரவியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 63 ஆக இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சென்னை சிவராஜசேகரன், மேற்கு சென்னை வீரபாண்டியன், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊட்டி கணேஷ், உட்பட 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் ஜனார்த்தன் திவேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Read More →Jun 10, 2017
செவ்வாய் கிரகம் தொடர்பில் தொடர்ச்சியான ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
இதற்காக சில வருடங்களுக்கு முன்னர் கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.
பல நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து குறித்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகின்றது.
இந்நிலையில் மற்றுமொரு ரோவர் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நிறுவனம் முனைப்புக் காட்டி வருகின்றது.
அங்குள்ள பௌதீக அமைப்பு மற்றும் காலநிலைகள் என்பவற்றிற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் இவ் விண்கலம் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் முன்னைய கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தினை விடவும் வித்தியாசமான வடிவமைப்பினை இது கொண்டுள்ளது.
விரைவில் வடிவமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் அதன் மாதிரியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Read More →Jun 10, 2017
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.ஆண்ட்ராய்டு 8.0 ஒ-இன் பீட்டா பதிப்பை அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது, கடந்த காலத்தைப் போலவே, அதன் கைபேசிகளும், கூகிள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல், நெக்ஸஸ் 5 எக்ஸ், நெக்ஸஸ் 6 பி, பிக்சல் சி மற்றும் நெக்ஸஸ் பிளேயர் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.
Read More →Jun 10, 2017
பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாட்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக செரிமானமடையும் தன்மை கொண்டது. இதற்குக் காரணம் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் ‘பைரேட்ஸ்’ என்ற எதிர் ஊட்டச்சத்துகள் முளைகட்டிய தானியங்களில் குறைக்கப்பட்டுவிடுவதுதான்.
Read More →Jun 10, 2017
பிளாஸ்டிக் போலி உணவுகளுடன் இப்போது புதிதாக பிளாஸ்டிக் சர்க்கரையும் சேர்ந்துள்ளது.
சென்ற சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள சந்தையில், பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், தெலுங்கானாவில் பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை அந்த மாநில உணவுப்பொருள் அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
இந்த நிலையில் பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சில கடைகளில், பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதாக ஆதரங்களுடன் சிலர் சமூகவலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து, பெங்களூரு உணவுத்துறை அமைச்சகம் இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Read More →Jun 10, 2017
டைனோசர்களின் இனம் எனக் கருதப்படும் டைரனோசொரோஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) தொடர்பில் ஆஸ்திரேலியாவின் நியூ இங்கிலண்ட் பல்கலைகழக (University of New England) புதைபடிவ ஆய்வாளர்கள் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அவற்றின் தோல்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்றினை அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இதன்படி டைரனோசொரோஸ் ரெக்ஸ்ஸின் தோலானது செதில்களைக் கொண்டிருந்ததாகவும், அவை இறகுகளால் மூடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இத் தகவலை ஆய்வில் ஈடுபட்ட பில் ஆர். பெல் (Phil R. Bell) என்பவர் வெளியிட்டுள்ளார். இவ் விலங்கின் கற்பனை வடிவம் 1918 ஆம் ஆண்டு வெளிவந்த த கோஸ்ட் ஸ்லம்பர் மவுண்டன் (The Ghost of Slumber Mountain) எனும் திரைப்படத்தில் முதன் முதலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More →Jun 10, 2017
வருமானவரி தாக்கல் செய்ய பான் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. நிதி மசோதா திருத்தங்களின் படி வரி செலுத்துனர்கள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், பான் கார்டுகள் காலக்கெடு முடிந்த பிறகு செல்லாது என்றும் மத்திய அரசு அறிவித்தது.
Read More →Jun 10, 2017
முன்பு டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தற்போது சென்னையில் ஒரு மாதகால போரட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் இன்று காலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கினர். இப்போராட்டம் ஜூன் 9-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.
விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Read More →Jun 9, 2017
பல்வேறு கடலோர நகரங்களை இணைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்க தனி நிறுவனம் அமைக்க மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தமிழக அரசுடன் கைக்கோர்த்துள்ளது.
இந்த நிறுவனம் சென்னை முதல் கன்னியாக்குமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த பின் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நீர்வழி போக்குவரத்துக்காக மாநில அரசுடன் மத்திய அரசு கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.200 கோடி முதலீட்டுடன், சென்னை-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை துவங்க கூட்டு நிறுவனத்தை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Read More →