Latest Posts
Jun 13, 2017
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி-திருவனந்தபுரம் இடையே கடல்வழி போக்குவரத்து சேவைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது என்று கூறியுள்ளார். அனைத்து கிராமங்களிலும் ஆண்டு இறுதிக்குள் மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Read More →Jun 13, 2017
சர்ச்சைக்குரிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நேற்றுடன் பதவி ஓய்வு பெற்றார். அவர் மீது சுமத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு இன்னும் மேற்கு வங்கப் போலிசாரால் நிறைவேற்றப்படவில்லை.
அவருக்கு எதிரான தீர்ப்பும் , அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், போலிசாரால் நிறைவேற்றப்படும்வரையோ அல்லது உச்சநீதிமன்றத்தால் திருத்தப்படும்வரையோ, தொடர்ந்து நிலுவையில் இருக்கும்.
இதற்கிடையே, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயிடம், தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இடை நிறுத்துமாறு கோரி நீதிபதி கர்ணன் சமர்ப்பித்த கருணை மனு, சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் முடிவு பொதுவாக அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
Read More →Jun 13, 2017
இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், கடந்த 2009ம் ஆண்டு, மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரில், பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தனர்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில், இறுதிக்கட்டப்போரின்போது ஏராளமானவர்கள் காணமல் போனதாகக் கூறப்பட்டது.
Read More →Jun 13, 2017
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனா கார்கே, தமிழகத்தில் இருந்து ஆர்.எஸ். பாரதி குழுவில் இடம்பெற்றுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
Read More →Jun 13, 2017
கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. இந்த வீடியோவில் பேசியது தான் இல்லை என சரவணன் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.
மற்றொரு வீடியோ கோவை சூலூர் தொகுதியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ. கூவத்தூரில் தங்கியிருந்த போது சிலருக்கு நகை, பணம் கொடுத்தனர் என கூறியதாக வெளியானது. இதனை கனகராஜ் எம்.எல்.ஏ. மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார்.
Read More →Jun 13, 2017
தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இன்று 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இதனால் அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
இரு கோஷ்டிகளும் தங்களுக்கே அதிமுக நிர்வாகிகள் ஆதரவு என்பதற்கான பிரமாண பத்திரங்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு கோஷ்டிகளும் இணையும் என்றும் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிக்கப்பட்டன.
Read More →Jun 13, 2017
சென்ற ஆண்டு நவம்பர் மாத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.15,000 கோடி மதிப் புள்ள பங்குகளை விற்பதற்கான நிறுவன முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஸ்டேட் வங்கி இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக வங்கிகள் மற்றும் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு மற்றும் இதர வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Read More →Jun 13, 2017
கேரள மாநிலம் கொச்சி அருகே மீன்பிடி படகின் மீது சரக்கு கப்பல் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதில் 2 பேர் உடல் மீட்கப்பபட்டது. ஒருவர் உடலை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது. கேரள மாநிலம் கொச்சி தோப்பும்படி துறைமுகத்தில் இருந்து, குமரியை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட 14 பேர் படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த படகு மீது பயங்கரமாக மோதியது.
Read More →Jun 13, 2017
அமெரிக்க முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாராரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்றதாகவும், மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.
நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாராரா தெரிவித்தார்.
பிரீட் பாராரா நியுயார்க் தெற்கு மாவட்ட முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞராக 2009-லிருந்து 2016 வரை பணியாற்றினார்.
இந்தியாவில் பிறந்த பிரீட் பாராரா, 1970-ல் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்.
Read More →Jun 12, 2017
கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் கடற்கரை நகரமான ப்ளோமாரியின் தெற்கில் இருந்து 5 கி.மீ தொலைவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துருக்கி நாட்டில் இஸ்தான்புல் மற்றும் ஏதென்சிலும் இந்த நிலநடுக்கம்உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More →