Latest Posts
Jun 16, 2017
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. மும்பையில் பிறந்து வளர்ந்த பகவதி, வழக்கறிஞராக மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றியிருந்தார். 1973-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் 17-வது தலைமை நீதிபதியாக கடந்த 1985-86-ம் ஆண்டுகளிலும் திறம்பட பணியாற்றினார். வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில். நேற்று காலமானார். இவருக்கு மனைவியும், முன்று மகள்களும் உள்ளனர். பகவதி இறுதி சடங்கு நாளை(ஜூன்17) நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More →Jun 16, 2017
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்ய்ம் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
அன்றன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை விவரம் தினமும் காலை 6 மணிக்கு பங்க்குகளில் மாற்றம் செய்யப்படும். இப்புதிய நடைமுறையின் முதல் நாளான இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 1.12, டீசல் 1.24 குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய முறைப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி செலவு, இறக்குமதி மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்திருந்தன.
Read More →Jun 16, 2017
அதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; கட்சியை தினகரன் கவனித்துக்கொள்வார் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More →Jun 16, 2017
இன்று நடைபெற்ற இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா வென்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
வங்கதேசம் முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 265 ரன் வெற்றி இலக்கோடு ஆடத்துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் தவானும் சிறப்பாக ஆடினர். ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவும் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் இணைந்து 40.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் மொத்தம் 265 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றியடையச் செய்தனர்.
Read More →Jun 15, 2017
சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தின்போது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அறிக்கை அளிக்க, ஐஐடி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடையை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் சார்பில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. அப்போது, விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சூரஜ் என்பவர் மீது மாணவர் அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரியும், ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Read More →Jun 15, 2017
நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரியதால் ஏற்பட்ட அமளியையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து இன்றும் மீண்டும் குரல் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதன்கிழமையன்று கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக, சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென்று மு.க. ஸ்டாலின் கோரினார்.
இதுதொடர்பான அமளி சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததால், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக மு.
Read More →Jun 15, 2017
அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் யு.பி.எஸ். மையம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சக்கர்பெர்க் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக விர்ஜ்னியா மாகாணத்தில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குடியரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவ் ஸ்காலிஸ் பேஸ்பால் உயிரிழந்தார்.
Read More →Jun 14, 2017
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், குடியரசுக் கட்சியின் மூத்த எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்ப்ட்டது. இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைச் சுட்டவர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவரும், அதிபர் தேர்தல் வேட்பாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளருமான ஜேம்ஸ் ஹாட்கின்சன் என கருதப்படுகிறது. ஜேம்ஸ் ஹாட்கின்ஸன் சம்பவ இடத்திலாயே பாதுகாப்பு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடியரசுக் கட்சியின் லூசியானா எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் உள்ளிட்டோர் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு குண்டு குடியரசுக் கட்சியின் எம்.பி. ஸ்கேலீஸ் இடுப்பு பகுதியில் பாய்ந்தது.
Read More →Jun 14, 2017
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. இந் நிலையில், ஜூலை, 19 வரை, ‘லாக்கப் டெத்’ தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல் இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
மேலும், போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் எக்காரணம் கொண்டும், லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி, ஜூலை, 19 வரை, போலீசார் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுக்கவும் தடை விதித்து, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
Read More →Jun 14, 2017
லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தீ கட்டுக்கடங்காமல் விடாமல் எரிந்து வருவதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது.
Read More →