Latest Posts
Jun 17, 2017
தற்போதைய கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரை, 400 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர பேரரசின் திருமல ராஜா ஆட்சி செய்துவந்தார். அப்போது உடையார் அரசை சேர்ந்த ராஜா உடையார், மைசூரு மீது படையெடுத்து, வெற்றி பெற்றார்.
இதையடுத்து, திருமல ராஜா உடையார் குடும்பத்தினர், ஸ்ரீரங்கபட்டணத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள்,அருகிலுள்ள மாலகி கிராமத்தில் தங்கியிருந்தனர். திருமல ராஜா உடையாரின் இரண்டாவது மனைவி அலமேலம்மா அணிந்திருந்ததங்க ஆபரணங்கள், ராஜா உடையாருக்கு மிகவும் பிடித்து போனது. தன் படையினரை அனுப்பி, நகைகளை வாங்கி
வரும்படி கூறினார்.
இதற்கு அலமேலம்மா மறுப்பு தெரிவித்தார். அரசரோ, நகைகளை வலுக்கட்டாயமாக வாங்கி வரும்படி ஆணையிட்டார். இதனால்,அலமேலம்மா, அங்கிருந்து தப்பியோடினார்; அவரை, படையினர் துரத்தினர்.
Read More →Jun 17, 2017
BBC தமிழ்
குற்றமற்ற அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிட விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம் இலங்கை வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிப்பதற்காக, குற்றவாளிகளாக இனம் காணப்படாத இரு அமைச்சர்களின் தண்டனையில் திருத்தம் தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசைக் கலைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஸ்டாலின் மனு தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவரால் சர்ச்சை சீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.
Read More →Jun 17, 2017
ஆறுமணிப்பூ எண்ணெய் மற்றும் ஃபிவர்ஃபியூ ஆகியவற்றின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம்.
3) ஆறுமணிப்பூ எண்ணெய் (Evening Primrose Oil)
ஆறுமணிப்பூ என்பது மாலையில் மலரும் மலைப்பூ வகையைச் சார்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காம்மா லினெலோனிக் அமிலத்தைக் (Gamma Linelonic Acid) கொண்டுள்ளது. இவ்வமிலம் ஒமேகா-6 கொழுப்பின் ஒரு வகையாகும். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் விறைப்பினை குறைக்க இயலும்.
மேலும் இதனால் மூளையின் ஆற்றல் மற்றும் ஒருமித்த கவனம் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும் என் கருதப்படுகிறது.
ஆறுமணிப்பூ எண்ணெயின் முக்கியமான சில பயன்கள் :
ஹார்மோன்களை சீரான நிலையில் வைத்திருக்க பயன்படுகிறது. முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது.
Read More →Jun 17, 2017
ஜப்பானை அடுத்த கடற்பகுதியில் அமெரிக்க போர்கப்பலான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட் அதைவிட 4 மடங்கு பெரிய சரக்குக் கப்பலுடன் மோதிய விபத்தில் 7 மாலுமிகளை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் ஜப்பானிய கடற்காவல் படையும் வேறு அமெரிக்க மற்றும் ஜப்பானிய கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட் ஜப்பானிலுள்ள யோகோஸ்கா கடற்படை தளத்தின் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. காணாமல் போன 7 மாலுமிகளும் சேதமான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்டின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று ஜப்பானிய கடற்காவல் படை தெரிவித்தது.
காணாமல் போன மாலுமிகளின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Read More →Jun 17, 2017
சென்னை செங்குன்றத்தில் அதிரடி சோதனையின் போது ரூ.71 கோடி போதைப்பொருள்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு செங்குன்றத்தில் செயல்பட்டுவரும் தனியார் கிடங்கில் சோதனையில் ஈடுபட்டனர். அக்கிடங்கில் வெளிநாடுகளுக்கு துணிகள் வடிவமைக்கும் பணியும், பேக்கிங் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் சோதனையில் ரூ.71 கோடி மதிப்பிலான 3 வகையான போதைப் பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
Read More →Jun 17, 2017
இந்தியாவுடன் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. 2018-ல் இத்தானியங்கிப் பகிர்வு செயலாற்றத் துவங்கும். இருப்பினும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் முதலாவதாக 2019 வாக்கிலே பரிமாறப்படும் என்று தெரிகிறது. தகவல் பரிமாற்றத்தின்போது இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியன கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.
வரி விஷயங்களில் தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு, AEOI அறிமுகப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.
தானியங்கிப் பகிர்வு எப்பொழுது துவங்கும் என்ற தகவலை சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இந்திய அரசுக்கு விரைவில் தெரிவிக்கும்.
Read More →Jun 17, 2017
ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விசாரித்து வருவதாக தெரிகிறது.
ஐ.எஸ். அமைப்பினர் அவர்களது கவுன்சில் கூட்டத்தை ரக்காவில் நடத்தும் பொழுது, அதனைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் பாக்தாதி கொல்லப்பட்டாரா என்பதை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சிரியாவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கு முன்னரும், அவர் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியாகியுள்ளது.
Read More →Jun 17, 2017
முன்னெப்போதும் இல்லாத கொடூரத்துடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீரில் 6 போலிஸாரை கொன்று அவர்களது முகங்களை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைத்திருக்கின்றனர்.
ஆனந்த்நாக் மவட்டத்தில் அசாபால் பகுதி தாஜிவாரா என்ற இடத்தில் நேற்று மாலை, போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், சப் இன்ஸ்பெக்டர் பெரோஷ் உள்ளிட்ட 6 போலீசார் பலியானதாக போலீஸ் டிஜிபி வைத் கூறி உள்ளார். பலியான பெரோஷ் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடன் சென்ற டிரைவர் மற்றும் 4 காவலர்கள் பலியாகி உள்ளனர்.
இச்சம்பவம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜுனைத் மாட்டூ என்பவனை பாதுகாப்புப் படையினர் கொன்ற சில மணி நேரங்களில் நடந்துள்ளது.
Read More →Jun 16, 2017
“நாம் கடந்த காலத்தைக் குறித்து வருந்தவோ எதிர்காலத்தைப் பற்றி பதற்றப்படவோ வேண்டாம். அறிவாளிகளுக்கு நிகழ்காலம் மட்டுமே முக்கியம்.”
– சாணக்கியர்
We should not fret for what is past, nor should we be anxious about the future; men of discernment deal only with the present moment.
-Chanakya
Read More →Jun 16, 2017
மும்பையில் 1993-ல் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டதுடன் 713 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்து 24 ஆண்டுகளுக்குப் பின் இதனைக் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட (TADA) நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தீர்ப்பின்படி மும்பை தாதாக்களான முஸ்தபா டோசா மற்றும் அபு சலீம் ஆகியோரும், ஃபிரோஸ் அப்துல் ரஷீத் கான், கரீம்ல்லா கான், தஹிர் மர்ச்சன்ட் மற்றும் ரியாஸ் சித்திக் ஆகியோருடன் சேர்ந்து மும்பையில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அப்துல் கய்யூம் என்பவர் குற்றவாளி என நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.
Read More →