Latest Posts

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்

Jun 22, 2017

பூமியைச் சுற்றியுள்ள விண்கற்களில் ஒன்று வெகு விரைவில் பூமியில் மோதப்போவதாக அயர்லாந்திலுள்ள வானியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இப்பேரழிவு நடக்கலாம் என்றும் கூறியுள்ளார். அயர்லாந்தில் உள்ள ((Queen’s University Belfast)) குவீன்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் ((Alan Fitzsimmons)) ஆலன் ஃபிட்சிம்மன்ஸ், 1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் விண்கல் விழுந்து 800 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதம் விளைவித்ததைப் போல் இன்றைய உலகில் அப்படிப்பட்ட விண்கல் மோதல் நடைபெறும்போது பெரிய நகரங்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பூமியை சுற்றியுள்ள விண்கற்களில் 1,800 அபாயகரமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More →

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

Jun 22, 2017

ஒரு மர்மமான ‘கல் வட்டம்’ செவ்வாய் மேற்பரப்பில் காணப்பட்டது என்று வேற்றுக் கிரகவாசிகளை தேடுவதாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் தெரிவித்தனர். நாசாவின் (NASA) செவ்வாய் கிரக கிரியோஸிட்டி ரோவரால் (Mars curiosity rover) எடுக்கப்பட்ட இந்த படம், யுஎஃப்ஒ -வைத் தேடுபவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், செக்யூர்டீம்10 (secureteam10) என்ற யூட்யூப் (youtube) காணொளியில் இடம்பெற்றது. “பாறைகளை செயற்கையாக அடுக்கி, ஒரு முழு வட்ட வடிவில், விசித்திரமாக உருவாக்கப்பட்டதைப் போல தோன்றுகிறது”, என்று செக்யூர்டீம்10-இனர் கூறுகின்றனர். மேலும் செக்யூர்டீம்10-இனர் “இவ்வமைப்பு பொதுவாக செவ்வாய் கிரகத்திலோ, சந்திரன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களிலோ காணப்படும் இதர பள்ளங்களைப் போன்றதல்ல; வட்டவடிவ அமைப்பில் இந்த பாறைகள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டதைப் போல் தோன்றுகிறது – அல்லது – அது அழிந்தோ அல்லது புதைந்தோ இருக்கும் மிகப்பெரிய அமைப்பின் பகுதியாகவோ, இடிபாட்டுப் பகுதியாகவோ கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளனர்.

Read More →

பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்

Jun 22, 2017

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அரசு ஆதரவு படைகளுடன் சண்டையிட்டனர். அப்போது, அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் சிலரும் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Read More →

இஸ்ரோ: ஸ்ரீஹரிகோட்டாவில் 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்

Jun 22, 2017

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.

Read More →

சரணடைந்த பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை

Jun 22, 2017

நீதிமன்றத்தில் சரணடைந்த பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, ஜாதிக பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கொம்பனி தெரு போலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்ற பத்திரிகையாளார்கள் சந்திப்பில் இஸ்லாத்தையும் அல் குர் ஆனையும் அவமதித்தும் நிந்தித்தும் கருத்து வெளியிட்டமை தொடர்பாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிஸாரால் இவருக்கு எதிராக தனித் தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஏற்கனவே இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Read More →

பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Jun 22, 2017

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., அணிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டது. ‘கட்சியில் தினகரனுக்கு, முக்கியத்துவம் அளிக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் ஒத்துழைக்க மாட்டோம்’ என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து, தினகரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவை சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்தனர். சென்னையில், நேற்று மாலை இப்தார் நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி அலுவலகம் வந்தனர்.

Read More →

சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

Jun 22, 2017

சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி வளைகுடாவின் வேகமான மாறி வரும் அரசியல் சூழல் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். புதிய பட்டத்து இளவரசர் முகம்மது, சவூதியின் பிரதேச போட்டியாளரான ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை பகிரங்கமாக எடுக்கிறார். சமீபத்தில் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துக் கொண்ட விவகாரத்திலும் சல்மானின் பங்கு பெரியது. ஈரானுடனான சவூதியின் போட்டி சன்னி – ஷியா பிரிவுகளுக்கு இடையிலான போட்டி என்பதோடு பிரதேசத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை நிலைநாட்டுவதற்குமானது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஈரான் சவூதியின் மாற்றத்தை “மென்மையான் அரசியல் கவிழ்ப்பு” என்கிறது.

Read More →

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சி: நடிகை ஈஸ்வரி ராவ்

Jun 21, 2017

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தன்னுடைய குழந்தைகளை அதிரவைத்து இருப்பதாக நடிகை ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார். ‘கபாலி’ வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘காலா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினி மும்பையைச் சேர்ந்த தாதாவாக நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கியது. Tamil Actress Eswari Rao Photos இந்தப் படத்தில் பாலிவுட் நடிகைகள் அஞ்சலி பாட்டில், ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More →

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா தீவிர முயற்சி

Jun 21, 2017

அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, தீவிரமாக யோசித்து, யோகா பயிற்சியை மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா. பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, ஆர்யா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இப்படத்தின் கதைக்காக தன்னுடைய உடலை அதிகளவில் அதிகரித்திருந்தார். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனில்லை. அவரால் தன்னுடைய பழைய வடிவத்தை பெற முடியவில்லை. தற்போது உடல் எடையை குறைக்க பட வாய்ப்பை மறுத்து வருகிறார். பாகுபலி முதல் பாகத்தைப் போன்று 2ம் பாகத்திலும், அனுஷ்கா ஒல்லியாக இருக்க வேண்டும். ஆனால், 2ம் பாகத்தில் நடிப்பதற்கு அனுஷ்கா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி விரும்பினார்.

Read More →

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூன் 30 நள்ளிரவிலிருந்து அமலாகிறது

Jun 21, 2017

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். “ஜி.எஸ்.டி.யின் செயல்பாட்டிற்காக பல்வேறு கருத்தியல்களுடைய அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் ஒரு மாற்றத்தையும் இந்த உலகமே காணப்போகிறது” என்று பிரதமர் மோடி லக்னவில் தெரிவித்தார். மேலும் அவர், ஜூலை 1-ல் ஜிஎஸ்டி துவங்கப்போவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். நாடு முழுவதும் இப்போது உற்பத்தி வரி, நுழைவு வரி, விற்பனை வரி எனப் பலவாறாக உள்ள வரி விதிப்பு முறைகளை மாற்றிச் சரக்கு சேவை வரி என்கிற ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர, மத்திய மாநில அரசுகள் இணைந்து திட்டமிட்டுள்ளன.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »