Latest Posts

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

Jun 23, 2017

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது. சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அனில் கும்பிளேவின் முதல் பயணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அமைந்தது. சரியாக ஓராண்டுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அங்கு சென்றிருக்கிறது.

Read More →

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார்

Jun 23, 2017

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று 17 கூட்டணி கட்சிகள் என்னை ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More →

யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகளுக்கு கவிஞர் ஜெயபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வு

Jun 23, 2017

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகளுக்கு தமிழ் மொழியில் ஜெயபாரதி, வேலு சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 35 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படுகின்றன. இதற்காக சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் யுவ சாகித்ய புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு தகுதி பெற்ற படைப்புகள், அவற்றின் எழுத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற 24 மொழிகளில் இருந்து 16 கவிதை தொகுப்புகளும், 5 சிறுகதை தொகுப்புகளும், 2 சுயசரிதை நூல்களும், ஒரு கட்டுரை தொகுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Read More →

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்குள் விழுந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் மீட்பு

Jun 23, 2017

சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீயில் கருகி உருக்குலைந்தது. இதனால் 2–ந்தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6–வது தளத்தில் இருந்து பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் கீழே விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியது. 20–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை எடுக்கும் பணி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சுமார் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட அந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகம் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More →

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு

Jun 23, 2017

அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் தெரிவு செய்யப்பட்டார். தலித் தலைவராக இருந்த ஜக ஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகராகவும் இருந்த மீரா குமாரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தனர். முன்னதாக, பாரதீய ஜனதாவும் அதன் தோழமைக் கட்சிகளும் பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தன. ராம்நாத் கோவிந்தும் ஒரு தலித் தலைவரே. தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. (அம்மா) மற்றும் அதிமுக (புரட்சித் தலைவி) அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

Read More →

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள்

Jun 22, 2017

மற்ற வளைகுடா நாடுகளால் பயண மற்றும் வர்த்தக புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட கத்தாரில் வாழும் இந்தியர்கள் ஈத் பண்டிகையின் போது நாடு திரும்புவதற்கு உதவியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய இடங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவைகள் தோகாவுக்கு கூடுதலான விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கத்தார் நாட்டில் இந்தியர்கள் இக்கட்டான நிலையில் விடப்படவில்லையென்றாலும், பல வளைகுடா நாடுகளின் தடை காரணமாக டிக்கெட் பெற முடியாமல் இருக்கலாம் என்றார். கத்தார் நாட்டில் 7 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

Read More →

பேஸ்புக், பயனர்கள் அவர்தம் சுயவிவர படங்களை கட்டுப்படுத்தும் கருவிகளை வழங்குகிறது

Jun 22, 2017

பேஸ்புக், தமது பயனர்கள், அவர்தம் சுயவிவர படங்களை (profile pictures) பிறர் தரவிறக்காமல் கட்டுப்படுத்தும் மென்பொருள் கருவிகளை, இந்தியர்களுக்கு சோதனைமுறையில் இப்போது வழங்கத் துவங்கியுள்ளது. நேற்று பேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பின்படி, தனியுரிமை உணர்வுடைய(privacy conscious) நபர்களின் பயன்பாட்டிற்காக, இந்தியாவில் புதிய மென்பொருள் கருவிகளை(software tools) சோதனை முறையில் வெளியிட்டுள்ளது. இக்கருவிகளை உபயோகித்து தனிநபர்கள் தங்கள் சுயவிவரப் படங்களை (profile pictures) யார்யார் தரவிறக்கம் செய்யலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய அம்சங்களின் வழியாக, கற்றுக் கொள்ளப்படும் அனுபவங்களின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கும் படிப்படியாக இவ்வம்சங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் பேஸ்புக் தகவல் கூறுகிறது.

Read More →

மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளை சுறாவுடன் போட்டியிடபோகிறார்

Jun 22, 2017

நீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், கடலில் மிகவும் திறமையாக வேட்டையாடும் சுறாவோடு போட்டியிட இருப்பதாக டிஸ்கவரி சானல் தொலைக்காட்சியின் செய்தி வெளியிட்டு உள்ளது. 31 வயதாகும் பெல்ப்ஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் மட்டும் 23 தங்கப்பதக்கங்களை பெற்று 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ளார். மைக்கேல் பெல்ப்ஸ் நீந்துகின்றபோது, அதிகபட்சமாக மணிக்கு 6 மைல் வேகத்தில் செல்லும் திறனுடையவர்.ஆனால், மிகப் பெரிய வெள்ளை சுறா மணிக்கு 25 மைல் வேகத்தில் நீந்தக்கூடியதாகும். அதிக தங்கமகன் Vs பெரிய வெள்ளை சுறா” என்கிற தலைப்பிலான டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜூலை 23 ஆம் நாள் தொடங்குகின்றது “சுறா வாரம்” நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இது அமையும்.

Read More →

நீச்சல் போட்டி: இங்கிலீஷ் கால்வாயை தாண்டி 66 வயது பாட்டி சாதனை

Jun 22, 2017

ஒவ்வொரு வருடமும் கால்வாய் நீச்சல் அசோசியேஷன்(Channel Swimming Association ) சர்வதேச அளவில் நீச்சல் போட்டி நடத்தி வருகிறது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த வருடம் சி.எஸ்.ஏ நடத்திய நீச்சல் போட்டியில் ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பட் ஹலண்ட் ஷார்டீ வெற்றி பெற்றுள்ளார்.66 வயதான இவர் பல தடைகளை மீறி வென்றுள்ளார். நீரின் வெப்பம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. மேலும் அவர் முகத்தில் ஜெல்லி பிஷ் கடித்தது. இதையும் மீறி அவர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நீந்தும் வழியில் பெரிய சன் பிஷ் பார்த்ததாக கூறியுள்ளார். சி.எஸ்.ஏ. மூதாட்டியின் சாதனையை உறுதி செய்துள்ளது.

Read More →

விஜய் பிறந்த நாளையொட்டி, அவரது 61 - வது படத்தின் பெயர் அறிவிப்பு

Jun 22, 2017

அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்யின் 61–வது படம் ஆகும். ஏற்கனவே ‘தெறி’ படத்தில் சேர்ந்து பணியாற்றிய விஜய்யும் அட்லியும் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »