Latest Posts
Jun 24, 2017
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) சேவை வரும் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது என கூறப்படுகிறது. அவசர சிகிச்சை, நோயாளியின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் அடங்கியுள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எடுத்துச் செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்பட உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திடமிருந்து இரண்டாண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read More →Jun 24, 2017
செய்தி : நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் பின்னடைவை தவிர்க்க தமிழக அரசு தமிழக பாடத்திட்டப்படி படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு.
Read More →Jun 24, 2017
கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் கூறினர்.
இதற்கு முன்னரும் இம்மூவரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிமுகவின் இரு கோஷ்டிகள், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்ததுடன், அதுபற்றிப் பேசுவதற்காக ஸ்டாலினை சந்தித்திருந்தனர். மேலும், மாட்டிறைச்சி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து திமுக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது, அவர்களுடன் சேர்ந்து இம்மூவரும் வெளிநடப்பு செய்தனர்.
இச்செயல்களால், ஆளும் அதிமுக எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியடந்துள்ளது.
Read More →Jun 24, 2017
நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ், விசா மீறல் வழக்கில் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.
இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது.
அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும், வரி செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
நிறுவனங்கள் நியூயார்க் மாகாணத் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக, எங்கள் சட்டங்களை மீறி நடக்க அனுமதிக்க மாட்டோம்.
Read More →Jun 24, 2017
கத்தாருடனான் முன்பு போல நட்புறவு தொடர பிற அரபு நாடுகளான சவுதி அரேபியா, யூ.ஏ.இ., பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகியவை 13 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் முக்கிய நிபந்தனைகளான அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் நட்புறவைத் துண்டிப்பது ஆகியவையும் அடங்கும்.
சவுதிக்கும் கத்தாருக்கும் இடையிலுள்ள அபு சம்ரா எல்லை வெறிச்சோடிக் கிடக்கிறது. மேலும், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம், ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் லெபனானின் ஈரானிய ஆதரவிலான ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளிட்ட குழுக்களுடனான உறவுகளை கத்தார் துண்டிக்கும்படி அரபு நாடுகளின் நிபந்தனை கூறுகிறது. கத்தாரிலிருக்கும், தங்கள் அரசுகளின் எதிப்பாளர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.
Read More →Jun 24, 2017
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியா வெற்றிகரமாக இராணுவ கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் ஒரு செயற்கைக்கோளுடன், 30 சிறிய செயற்கைக்கோள்களை அவற்றுன் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இவற்றுள் ஒன்று மட்டும் வெளிநாட்டு செயற்கைக்கோள். இது இஸ்ரோவின் மலிவு விலை விண்வெளித் திட்டத்திற்கான முக்கியமான மைல்கல்லாகும்.
இஸ்ரோ தொடர்ச்சியாக பி. எஸ். எல். வி ராக்கெட்டுகளை கொண்டு 40 வெற்றி பயணங்களை மேற்கொண்டுள்ளது. ராக்கெட் தரையிலிருந்து புறப்பட்டு 27 நிமிட நேரத்திற்குள்ளாக அனைத்து செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக அவற்றின் சுற்றுப் பாதையில் செலுத்தியது.
கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் தொலை உணர்வு சேவைகளை இனிவரும் தினங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More →Jun 24, 2017
நீட் தேர்வு முடிவுகளை இன்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மணவர்கள் ஒருவர்கூட இடம் பெறமுடியவில்லை.
கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற்கான நீட் (NEET) தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு, தமிழக மானில கல்வித்துறையின் பாடத்திட்டத்திற்கும், மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், தமிழகத்தில் நடத்தப்பட மாட்டாது என்று மானில அரசு, உறுதியளித்திருந்த போதும், மத்திய அரசின் கோரிக்கையின் மீதான உச்சநீதிமன்ற ஆணையால் தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்பட்டது. மாணவர்களும் வேறுவழியின்றி நீட் தேர்வை சந்தித்தனர்.
ஜெயலலிதா இறந்தபின் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதிமுக கோஷ்டிகளும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே கொள்கையக் கொண்டுள்ள தமிழக அரசும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவுகளைப் பற்றி எதுவும் கவலைப் படாமல், மத்திய அரசின் தலையாட்டிப் பொம்மையாக இருந்து கொண்டிருக்கிறது.
Read More →Jun 23, 2017
சீட்லெஸ் பழங்கள் சத்தில்லாத பழங்களா ?
Read More →Jun 23, 2017
விஜய் நடிக்கும் மெர்சல் படம்
Read More →Jun 23, 2017
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர்.
Read More →