Latest Posts
Jun 26, 2017
அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து, ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என டிவிட்டரில் பதிவிட்டார்.
Read More →Jun 25, 2017
இந்தியப் பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில், நேற்று உரையாற்றும்போது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி நிலையை இந்தியர்கள் யாரும் மறக்கமாட்டார்கள் என்றும், அது கருப்பு நாள் என்றும்” தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி பேசுகையில், 1975ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, எமர்ஜென்சி நிலையை கொண்டுவந்தபோது, மக்கள் தான் ஜனநாயகத்தை பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.
மோடியின் இப்பேச்சுக்குப் பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாம் வேதக்கான், “ஆம், நாம் எமர்ஜென்சியை மறந்துவிட்டோம், ஆனால் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையானது நாட்டில் நிலவுகிறது. மீடியாக்கள் இலக்காக்கப்படுகிறது, மீடியாக்கள் மீது சோதனைகள் நடக்கிறது, இவைகளை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில்தான் பட்டியலிட முடியும்,” என தெரிவித்துள்ளார்.
Read More →Jun 25, 2017
உலகெங்கும் முஸ்லிம்கள் ஈத் அல்-ஃபித்ர் என்ற ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.
Read More →Jun 25, 2017
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தத்தில் 148 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
டேங்கர் லாரி வேகமாக நெடுஞ்சாலையில் ஒரு வளைவில் ஓடியபோது, டயர் ஒன்று தீ பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனைப் பார்ப்பதற்கும் கவிழ்ந்த லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்கவும் பெருங்கூட்டமாக அருகிலிருந்து வந்த மக்கள் கூடினர். கவிழ்ந்த 45 நிமிடங்களுக்குப் பின் டேங்கர் லாரி வெடித்து தீப் பிழம்புகளால் சூழ்ந்து கூடியிருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீதும் பரவியது. 80 பேருக்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்ததாக நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர்.
Read More →Jun 25, 2017
சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேட்மின்டனுக்கான ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் சென் லோங்கை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வென்று அப்பட்டத்தை வென்றுள்ளார்.
மூன்றாவது முறையாக சுப்பர்ஸீரீஸ் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 56.250 டாலர் பரிசு பெற்றார். பேட்மின்டன் உலக சம்மேளனத்தின் (BWF) தரப்பட்டியலில் 11 வது இடத்தில் இருக்கும் 24 வயதான, குண்டூரில் பிறந்த ஸ்ரீகாந்த் தனது ஐந்து வருட போட்டிகளில் அவரை எதிர்த்து விளையாடிய 28 வயதான சென் லோங்கை இதற்கு முன்பு ஒருபோதும் வென்றதில்லை.
Read More →Jun 24, 2017
சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும் 120 பேரைக் காணவில்லை. சீனாவின் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் குறிப்பாக மழைக்காலங்களில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்படுவது வழக்கமாகும். தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள ஜின்மோ கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண்களும், பாறைகளும் சரிந்து விழுந்தன.
இதில் சுமார் பல வீடுகளுடன், 140க்கும் மேற்பட்டோரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. திபெத் – அபா பகுதிக்கு இடையே உள்ள மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இவை சுமார் 2 கி.
Read More →Jun 24, 2017
“ஒவ்வொரு நட்பின் பின்னாலும் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் கலக்காத நட்பே இல்லை எனலாம். இதுதான் கசப்பான உண்மை.”
– சாணக்கியர்
“There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth.”
-Chanakya
Read More →Jun 24, 2017
வெங்கட் பிரபுவின் புதிய படத்துக்கு ‘பார்ட்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா காஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ். படத்தொகுப்பு – பிரவீன் கே.எல். இசை – பிரேம்ஜி. தயாரிப்பு – அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.
Read More →Jun 24, 2017
லண்டனில் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்ற இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. பின்னர் காலிறுதியில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இன்று நடைபெற்ற 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இறுதியில், இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.
Read More →Jun 24, 2017
கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ – ஐ தயாரித்த மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார்.
64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதுமான, இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ‘கலாம் சாட்’ என, பெயரிடப்பட்டது. இக்கையடக்க செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள, ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, ஜூன் 22-ம் தேதி வெற்றிகராக விண்ணில் ஏவப்பட்டது.
Read More →