Latest Posts

ஐரோப்பாவில் ‘பெட்யா’ ரேன்சம்வேர் தாக்குதல்: பெரிய அளவில் இடையூறு

Jun 28, 2017

ஐரோப்பா முழுவது, குறிப்பாக யுக்ரேனில், ‘பெட்யா’ (Petya) என்ற ரேன்சம்வேர் தாக்குதல் தரவு மையங்களிலுள்ள செர்வர்கள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்டுள்ளது. பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘வான்னக்ரை’ (Wanna Cry) என்ற ரேன்சம்வேர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை விடவும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுக்ரேனில், தனியார் நிறுவன மற்றும் அரசாங்க அதிகாரிகள் அங்குள்ள மின்கட்டமைப்புகள், வங்கிகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் கடுமையான ஊடுருவல்கள் இருந்ததாக அறிவித்தனர். மூத்த அதிகாரி ஒருவர், இருண்ட கணினி திரையின் புகைப்படத்தைக் காண்பித்து, “முழு நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை ” என்று பதிவு வெளியிட்டுள்ளார்.

Read More →

கூகுள் நிறுவனத்தின்மீது ஐரோப்பிய யூனியன் 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது

Jun 27, 2017

கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் நம்பிக்கையின்மை விதிகளை (Antitrust rules) மீறியதால், அபராதத்தொகையாக 2.42 பில்லியன் யூரோ செலுத்தியாக வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. தனது இணையத் தேடல் இயந்திரம் ( Search Engine) மூலம் கொடுக்கும் தேடல் முடிவுகளில், கூகிள் தனது சந்தை ஒப்பீட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் அநுசரித்து, சேவைகளை மாற்றியமைக்காவிட்டால், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் உலகளாவிய தின வருமானத்தில் 5% வரை அதிகமாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூகுளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மிகச் சமீபத்திய நிதி அறிக்கையின்படி, அதன் வருமானம் நாளொன்றுக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

Read More →

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் : எடப்பாடி - தினகரன் கோஷ்டிகளிடையே பனிபோர்

Jun 27, 2017

அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் கோஷ்டிகளிடையே பனிபோர் உச்சநிலையை அடைந்து உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து சென்னை திரும்பிய டி.

Read More →

தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்க ரூ. 40 கோடி லஞ்சம் : வருமான வரித்துறை

Jun 27, 2017

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருளை விற்க, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிகாரிகளுக்கும் ரூ. 40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் போதைப் பொருட்கள் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் பற்றி விசாரிக்க வலியுறுத்தி உள்ளார். லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.

Read More →

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

Jun 26, 2017

இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார். பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.

Read More →

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

Jun 26, 2017

திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது. முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள் நுழையும் போது தடுக்கப்படுவதால் ஏற்படும் கஷ்டங்களை சட்டபூர்வமாக கூறுவதில் பிரச்சனையில்லை.

Read More →

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் : இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

Jun 26, 2017

வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஹானேவின் சதம் – 104 பந்துகளில் 103 ரன்கள் – இந்தியாவை 310/5 என்ற ரன்களில் தனது இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்ள உதவியது. மழையால் தாமதமாக துவங்கிய போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் தலைவர் கோலி 66 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார், அடுத்து விளையாடிய மே. இந்திய அணி 205/6 என்ற ரன்களில் விளையாட்டை முடித்துக் கொள்ள இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

Read More →

லாக்கரில் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் பேங்க்

Jun 26, 2017

வங்கிகளில் உள்ள லாக்கரில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைத்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு வேளை அவை திருட்டு போய்விட்டால், வங்கி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று விடும் என்றும் பொதுமக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, வங்கிகள் அதற்கு பொறுப்பு ஏற்காது என்ற கசப்பான உண்மை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வக்கீல் குஷ் கல்ரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கியும், 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் தெரியவந்தது. வாடிக்கையாளர்களின் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை பொதுத்துறை வங்கிகள் துறப்பதையே அது காட்டியது. இந்தப் பதில், வக்கீல் குஷ் கல்ராவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

Read More →

மானசரோவர் திருப்பயணிகளை அனுமதிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு தொடர்கிறது : சீனா

Jun 26, 2017

திபெத்திலுள்ள கைலாச மானசரோவர் நோக்கி திருப்பயணம் சென்ற 47 பயணிகளை, சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் அருகே தடுத்து நிறுத்தியது குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெங் சூங்ஹாங் கூறுகையில், “எனக்குக் கிடைத்த தகவலின் படி, இரண்டு அரசாங்கங்களும் இந்த விடயத்தில் தொடர்பில் இருக்கின்றன”, என்றார். ஆனால், சீன-இந்திய எல்லையில் பயணிகள் சீன அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட, நிலச்சரிவுகள் மற்றும் மழை போன்ற வானிலை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருந்ததா என்பது குறித்து விளக்க மறுத்து விட்டார். இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கருத்து தெரிவிக்கையில், ‘‘நாது லா வழியாக இந்திய ஆன்மிக பயணிகள் செல்வதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

Read More →

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுக ஆட்சி கவிழும் : பிரேமலதா

Jun 26, 2017

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கு பெற்றுப் பேசும்போது தெரிவித்தார். அவர் கூறியதாவது : “கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டோம். மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் தோற்றுப் போனோம். ஆனால், இந்த தோல்வி என்பது மிகவும் தற்காலிகமானது. அதே போன்று தேர்தலில் தோல்வி அடைவது என்பது சகஜமானது. அடுத்து வரும் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”, என்றார். மேலும் அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகின்றன.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »