Latest Posts
Jun 29, 2017
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த மூத்த கத்தோலிக்க கார்டினல் மீது பலவேறு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண போலிசார் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸின் தலைமை நிதி ஆலோசகரான கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு இப்போது ஆளாகியுள்ளார். இவர் போப்பிற்குப் பின்னால் வத்திக்கானில் மூன்றாவது மிக சக்தி வாய்ந்த நபராவார். இதுவரை கத்தோலிக்க திருச்சபையில் இவ்வளவு உயர்ந்த தரவரிசையில் உள்ள வத்திக்கான் அதிகாரி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு ஆளானதில்லை.
விக்டோரியா மாநில பொலிஸ் துணை ஆணையாளர் ஷேன் பட்டன், கார்டினல் பெல்லுக்கு எதிரான புகார்களைக் குறித்த மேலதிக விவரங்கள் எதனையும் விவரிக்கவில்லை.
பெல் 10 சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாக முன்னதாக கூறப்பட்டது.
Read More →Jun 29, 2017
இலங்கையில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் தபால் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து லட்சத்திட்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்க முடியாமல் தேங்கியுள்ளன. தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, 653 தபால் காரியாலயங்கள் மற்றும் 3,410 கிளை தபால் அலுவலகங்களின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More →Jun 29, 2017
பூட்டானிலுள்ள 269 சதுர கி.மீ பரப்பளவிலான ஒரு நிலப்பரப்பு சீனாவினால் தனது என்று உரிமை கொண்டாடப்படுகிறது. இவ்விடத்தில் சாலைத் கட்டுமானம் தொடர்பாக சீன மற்றும் இந்தியத் துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. இதன்விளைவாக, புது டெல்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2013-ல் தாவ்லத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) -இல் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட நெருக்கடியைப் போல இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.
சுமி பள்ளத்தாக்கிற்கு எதிரில் இருக்கும் டோக்லம் பீடபூமியில் நிகழும் இம்மோதல்கள், பூடானின் ஆயுதப் படைகளை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன், அங்கு பணியிலிருக்கும் இந்திய துருப்புக்கள் எதிர்கொள்கின்றனர்.
மற்றொரு அறிவிப்பின்படி, ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் வியாழக்கிழமை சிக்மிற்கு வருகை தருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More →Jun 29, 2017
மாடுகள் இறைச்சிக்காக விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரையிலுள்ள உயர்நீதிமன்ற கிளை தடை நீட்டிப்பு செய்தது.
சென்றமாதம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :
கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.
Read More →Jun 28, 2017
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இங்குள்ளவர்களில் பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., கார்டு வழங்கப்படும். டச்சு பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இந்தியா வர 5 ஆண்டுக்கான விசா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். சிறந்த அரசால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி அமைத்துவிட முடியாது.
Read More →Jun 28, 2017
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர், 2004ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது.
தற்போது செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்ததற்கான தடயத்தை ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தின் விளிம்பில் தற்போது ரோவர் உள்ளதாகவும், இந்தப் பள்ளம் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
இது பள்ளமாக இருக்காது. மிகப்பெரிய ஏரியாக இருக்கலாம். இதில் காணப்படும் பாறைகள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Read More →Jun 28, 2017
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ளது.
இந்நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரும், 30ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கேற்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், அனைத்து, எம்.
Read More →Jun 28, 2017
இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பார்க்லேஸ் வங்கி இந்த் முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது. இந்த ஏடிஎம்கள் எப்படி பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஷெப்பர்ட்-பேரென் என்பவர் ஒரே ஒரு நிமிடம் தாமதமாக வங்கிக்கு சென்றதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர் வங்கி மூடியிருந்தாலும் பணம் எடுக்க வசதியாக ஓர் இயந்திரம் இருந்தால் என்ன என்று சிந்தித்தார். அந்த இயந்திரத்தில் ஓர் அட்டையை நுழைத்தால் அது பணம் வழங்கியது. இந்த முறையை அவர் சாக்லேட் வழங்கும் இயந்திரத்தைப் போன்று செயல்படும் தன்மையுடன் அமைத்தார்.
Read More →Jun 28, 2017
8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் லீசெஸ்டரில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.
பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டக்வொர்த் விதிமுறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும்.
Read More →Jun 28, 2017
பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில், அதிகாரபூர்வ இல்லத்தில், அமைச்சர் KT.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :
“நான் எல்லா தனியார் நிறுவன பாலையும் குற்றம்சாட்டவில்லை. பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். என் புகாருக்கு பின்னர் பாலில் கலப்படம் செய்வது குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சில தனியார் நிறுவன பால் பவுடர்களில் ப்ளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா கலந்துள்ளது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ரசாயனங்கள் கலந்த பாலை குடிப்பதால் பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றது.
Read More →