Latest Posts
Jul 6, 2017
வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
நிக்கி ஹேலியின் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர், நிக்கி ஹேலி, புதன்கிழமையன்று, ஐ.
Read More →Jul 5, 2017
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுடனான 7 புரிந்தணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த இவ்வேழு ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு உறவு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று, இஸ்ரேல் அதிபர் ரியூவன் ரிவ்லினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்தியாவுக்காக இஸ்ரேலும், இஸ்ரேலுக்காக இந்தியாவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Read More →Jul 5, 2017
ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக காட்ட்ப்பட்டுள்ளது. மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது.
எது உண்மை ?
ஆஸ்திரேலியாவின் ஒரு பிராந்தியத்தில் மட்டும் காணப்படும் புஷ்வுட் பெரியிலிருந்து, EBC-46 என்ற ஒரு ரசாயனத்தை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த ரசாயனத்தை நேரடியான ஊசி மூலம் எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் குதிரைகளில் பரிசோதித்த போது, அவற்றின் புற்றுநோய் கட்டிகளை இந்த ரசாயனத்டினால் அழிக்கும் திறனைப் பற்றிய முதல் படியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.
Read More →Jul 5, 2017
இலங்கை பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்தியரத்னம், ராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ்சேனாநாயக்க, ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் மந்திரி ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More →Jul 5, 2017
வடகொரியா நேற்று மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையின் எதிரொலியாக ஐ.நா. அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். அதன் அண்டை நாடான தென்கொரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைத்தளமும், படைவீரர்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அணுகுண்டு சோதனை, ஏவுகணை, ராக்கெட் என்ஜின், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என பல்வேறு சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.
Read More →Jul 5, 2017
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவடையும். இதுவரை 70,000 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று 3,880 மீட்டர் உயரத்தில் பயணம் மேற்கொண்ட போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர் சண்டேர் ஷாகர் (வயது73) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதே போன்று உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவா காந்த் மிஸ்ரா (வயது59), என்பரும் உயிரிழந்தார்.
Read More →Jul 5, 2017
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார். மிக நேர்மையான அதிகாரியென ஊடகங்களால் புகழப்பட்ட இவர், அப்படியே கட்சி சார்பற்று நேர்மையான ஆளுனராகவும் இருப்பார் என மக்கள் நினைத்தனர். நேற்று ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விஷயம் புதுவை முதல்வருக்கு தெரிவிக்கப்படாமல் நடந்தேறியதாகத் தெரிகிறது. இதனிடையே மரபை மீறி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் என அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More →Jul 5, 2017
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜி.எஸ்.டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று வருமான வரித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹஸ்முக் ஆதியா கூறியாதாவது:- ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 39,000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஸ்டி யில் குறிப்பிடப்படவில்லை. சிறு குறு வணிகள் ஏற்கனவே பதிவு செய்துள்ள வரியை செலுத்தினால் போதும். ரூ.75 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக வருவாய் கொண்ட தொழில்கள் பில் அவசியம் கொடுக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்கு பின் உள்ள விலையை தெளிவாக பொருட்களில் பதிவிட வேண்டும்.
Read More →Jul 5, 2017
இஸ்ரேலில் மோடி | திருப்பிவிடப்பட்ட விமானம் | உடைபற்றிய உகாண்டா அரசின் உத்தரவு | நீட் தேர்வு மனு தள்ளுபடி | கிழக்கு மாகாண புதிய ஆளுநர் | டெங்கு கொசு ஒழிப்பு | மே.வங்க ஆளுநர் மிரட்டினார் | புதிய தலைமை தேர்தல் ஆணையர்
பி.பி.சி. தமிழ்
இஸ்ரேலில் நரேந்திர மோதி உரையின் 5 முக்கிய அம்சங்கள்
இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது.
பறவையால் தாக்கப்பட்டதா? திருப்பிவிடப்பட்டது ஏர்-ஏசியா விமானம்
பறவையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏர்ஏசியா எக்ஸ் விமானம் பிரிஸ்பேன் நோக்கி திருப்பிவிடப்பட்டது
Read More →Jul 4, 2017
அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை ஜப்பான் அருகிலுள்ள கடற்பகுதியில் விழுந்ததாக பின்னர் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
Read More →