Latest Posts
Jul 7, 2017
இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பு ஜெ.இ.இ. (JEE ADVANCED) நுழைவுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு 2 கேள்விகள் தவறாக இருந்த காரணத்தினால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
கருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம், விஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Read More →Jul 7, 2017
ஜெர்மனியின் G20 உச்சிமாநாடு நடக்கவிருக்கும் ஹம்பர்க் நகரில் ஆர்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதல்களில் எழுபத்தாறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
மூன்று பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆர்பாட்டக்காரர்களில் சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மோதல்கள் 12,000 ஆர்பாட்டக்காரர்கள் கலந்து கொண்ட ” நரகத்திற்கு வரவேற்பு” என்ற அணிவகுப்பினை பொலிஸார் தடுத்தபோது தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், காலநிலை மாற்றம், வர்த்தகம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் பற்றி இம்மாநாட்டில் விவாதிப்பர்.
கற்கள், தீப்பந்தங்கள் மற்றும் பாட்டில்கள் ஆகியவற்றை வீசி எறிந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் மிளகு ஸ்ப்ரேயை பாய்ச்சினர்.
Read More →Jul 7, 2017
தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.
காளைகள் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஜல்லிக்கட்டில் மிருகவதை இருப்பதாகவும் கூறி பீட்டா, தமிழர்களின் வீரவீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறாதவாறு உச்சநீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைப்பெறவில்லை.
தமிழக இளைஞர்களால், இந்த போட்டி நடத்தப்பட வேண்டும், தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும் என அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், மதுரையின் தமுக்கம், சென்னையில் மெரினா என தமிழகம் முழுவதும் பரவி உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு வலுப்பெற்றது.
Read More →Jul 7, 2017
கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், போராட்டத்தை வாபஸ் பெற்று, திரையரங்குகளை இன்று முதல் திறப்பதற்கு ஒப்புதல் அளித்தனர்.
கேளிக்கை வரி பிரச்னை தொடர்பாக பேச 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதையடுத்து, 4 நாட்களாக நீடித்த திரையரங்கு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் திரையுலகினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
Read More →Jul 6, 2017
* கத்தார் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இந்த நாடுகள் விதித்து உள்ள 13 நிபந்தனைகள் குறித்து ஆலோசிப்பதாக கத்தார் அறிவித்ததை தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
* உக்ரைனில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ்களை பரப்பி சைபர் தாக்குதல் நடத்த மர்ம நபர்கள் முயற்சித்தனர். ஆனால் சைபர் பிரிவு போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு இந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்.
Read More →Jul 6, 2017
இந்தியா- பூடான் – சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியபோது , இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து உள்ள சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தியா, அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே கடும் பதட்டம் நிலவி வரும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்று சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ் எழுதி வருகிறது.
Read More →Jul 6, 2017
2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் இந்திய சிறுவன் மோஷே ஹெல்ட்பர்க் அவனது பெற்றோரை இழந்தான் தற்போது இஸ்ரேலில் அவரது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான். இந்த நிலையில் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி சிறுவன் மோஷே ஹெல்ட்பர்கை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை முதல் முறையாக பார்த்ததும் சிறுவன் ஓடிச்சென்று டியர் திரு.மோடி…. ஐ லவ் யூ என்று கண்ணீர் பெருக்குடன் பிரதமர் மோடியை கட்டி அணைத்து கொண்டான். அப்போது அந்த சிறுவனிடம் இந்தியாவிற்கு வந்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று உறுதி அளித்தார். சிறுவனுக்கும் அவனது சார்ந்த குடும்பத்திற்கும் நீண்ட கால விசா வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
Read More →Jul 6, 2017
சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரியும் விதித்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை காப்பாற்ற நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று பட உலகினர் பலர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பதிவிட்டனர். ரஜினிகாந்த் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அடுத்த வாரம் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கேளிக்கை வரி குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டு உள்ளார்.
Read More →Jul 6, 2017
தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக்கொண்டு லண்டனில் குடியேறிவிட்டார். இதில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.750 கோடிக்கும் மேற்பட்ட கடனும் அடங்கும்.
இதுபற்றி அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, சமீபத்தில் மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விஜய் மல்லையா மீதான இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். 61 வயதான விஜய் மல்லையா சமீபத்தில் லண்டனில் போலீசாரிடம் சிக்கினார். பின்னர், அவரை அங்குள்ள கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
Read More →Jul 6, 2017
கத்தாரின் பதில் எதிர்மறையானது என்றாலும் புதிய தடைகள் எதுவும் இல்லை என்று எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷௌக்ரி கூறும் போது, ” எங்களுக்கு உருப்படியான பதில் கிடைக்கவில்லை; ஒட்டுமொத்தமாக பதில் எதிர்மறையாகவுள்ளது. இப்பதில்கள் கத்தார் தனது கொள்கைகளிலிருந்து பின்வாங்கும் என்ற கருத்திற்கு இடம் தரவில்லை” என்றார். இதனிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் ஒன்று கூடி தங்களின் கெடு முடிந்தப் பிறகு கத்தார் அளித்துள்ள பதில்களைப்பற்றி விவாதித்தன. அவை கத்தாரிடம் 13 கோரிக்கைகளை எழுப்பியிருந்தன. “கத்தாருக்கு எதிரான அரசியல், பொருளாதார தடைகள் அது தனது கொள்கைகளை நல்ல முறையில் மாற்றிக்கொள்ளும் வரை தொடரும்” என்றார் சவூதி வெளியுறவு அமைச்சர் ஜூபேர்.
Read More →