Latest Posts

டார்ஜிலிங்கில் போலீஸ் நிலையம் முற்றுகை : மீண்டும் போராட்டம்

Jul 9, 2017

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் காரணமாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.   முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருவதால் மருந்துகடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.   இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தொண்டர் டாசி பூதியா (வயது 28) என்பவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார்.

Read More →

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்

Jul 9, 2017

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார். முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More →

பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: எடப்படி பழனிசாமி

Jul 8, 2017

தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை சிறைவிடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரினர். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “மதிப்பிற்குரிய பேரறிவாளனை பரோலில் அனுப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 10 ஆண்டுகளை சிறையில் கழித்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். பேரறிவாளனுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று உள்பட பல உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் கோரிவருகிறார்.

Read More →

புதன் கோளைச் சுற்றப் போகும் இரட்டை செயற்கைக் கோள்கள் சென்றடைய 7 ஆண்டுகள் ஆகும்

Jul 8, 2017

புதன் கோளுக்கு கொண்டு செல்லும் இரட்டை செயற்கைக்கோள் தயாராகிவிட்டது. அது ஊடகவியலாளர் பார்வைக்காக நெர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதன் கோளுக்கு அனுப்புவதற்கான இரட்டை செயற்கைக்கோள்கள் தயாராக உள்ளன. பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ள இந்த செயற்கைக்கோள்களை, நெதர்லாந்தில் உள்ள நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த இரு செயற்கைக்கோள்களும், விண்ணில் ஏவப்பட்ட பின்னர் புதன் கிரகத்தை சென்றடையும். அதன் பின்னர், அவை தனித்தனியாக பிரிந்து அவைகளுக்குரிய கண்காணிப்பு பணிகளை தனித்தனியாக மேற்கொள்ளும். அடுக்கப்பட்ட விமானங்கள் என்று கூறப்படும் இந்த இரு செயற்கைகோள்கள் இணைக்கப்பட்ட நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டன. ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்படும்.

Read More →

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம்

Jul 8, 2017

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் சமீபத்தில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை சமீபத்தில் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவிர, ஆளுனர் கிரண்பேடி புதுச்சேரியின் நிர்வாகத்தில் தலையிடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் குற்றம்சாட்டிவந்தார். இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியிலிருந்து திரும்பப் பெறக்கோரி, இன்று அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

Read More →

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு

Jul 8, 2017

மைரோசாஃப்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை நீக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டம் தீட்டி வருவதாக பல நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன . இது குறித்த எமது முந்தைய செய்தியை இங்கே பார்க்கலாம் : மைக்ரோசாஃப்ட்: ‘க்ளௌட்’ சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதால், ஆயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து தூக்குகிறது இந்த நிலையில், இதனை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி படுத்தி உள்ளது.   இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாவது:   சுமார் 4000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிற நிறுவனங்களில் நடப்பதை போன்று தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் மாற்றங்கள் நடந்து வருகிறது.

Read More →

“அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன”: ஜி - 20 மாநாட்டில் மோடி பேச்சு

Jul 8, 2017

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி 20 நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், தெற்கு ஆசியாவில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, நைஜீரியாவில் போஹோகாரம் என்று பல்வேறு பெயரில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இருந்தாலும் தீவிரவாதம் மற்றும் பலரை கொன்று குவிப்பது தான் அவர்களது நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.

Read More →

ஜி - 20 : டிரம்ப் - புடின் முதல்முறையாக சந்திப்பு

Jul 8, 2017

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார். ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

Read More →

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Jul 8, 2017

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அனுமதிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Read More →

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

Jul 8, 2017

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது, டெண்டர் விட 3 ஏக்கர் நிலம் பெற்றதாக ஊழல் புகாரை முன்வைத்து மொத்தம் 5 வழக்குகளை சிபிஐ இன்று பதிவு செய்துள்ளது. பிஹாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் குர்காவ்ன் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு மீது பல்வேறு ஊழல் செய்தற்கான ஆதாரம் சிக்கியிருப்பதாக சிபிஐ கூறியுள்ளது.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »