Latest Posts
Jul 10, 2017
சீனா – பூட்டான் நாடுகளிடையேயுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் டோக்லாமில் நுழைந்த வாதத்தை முன்வைத்து காஷ்மீர் இந்திய எல்லைக்குள் தனது நாட்டின் துருப்புக்கள் நுழைய முடியும் என்ற தலைப்பில் ஒரு சீன நிபுணர் வாதிட்டார். சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் அவர் மேற்படி வாதத்தைக் கொண்டுள்ள கட்டுரையை எழுதியுள்ளார்.
இந்தியா டோக்லாம் பகுதிக்கு ராணுவத்தைக் கண்டித்து அவர் வெளியிட்ட பல வாதங்களில் மேற்படி வாதமும் ஒன்றாகும். இந்தியா இதுகுறித்தான தனது நிலையை முன்பே தெரிவித்திருந்தது.
சீனாவின் மேற்கு சாதாரண பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் லோங் ஜிங்சுங், குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் கூறியதாவது:
Read More →Jul 10, 2017
காஷ்மீரில் பர்ஹான் வானி நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கடந்த இரு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அமர்நாத் யாத்திரையின் துவக்கத்தைக் குறிக்க பஹல்கம் முகாமுக்கு அருகே சிறப்புப் பூஜை நடைபெற்றது.
Read More →Jul 9, 2017
அட்லீ இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் வைகைப் புயல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்போது மெர்சல் செட்டில் நடித்துக் கொண்டிருந்த போது வடிவேலு படுகாயம் அடைந்ததாக தகவல் பரவியது. உண்மையில், வடிவேலு நன்றாக இருப்பதாகவும், இது வெறும் வதந்தி என்றும் அவருக்கு நெருக்கான வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Read More →Jul 9, 2017
ஞாயிறன்று வடகொரிய அரசு ஊடகங்கள் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் தம்மை கோபமூட்டுவதாக வடகொரிய அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டின. கொரிய தீபகற்பம் பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, வட கொரிய அரசுக்கு சொந்தமான ‘ரோடாங் சின்முன்’ நாளிதழில் ’வெடி மருந்து பீப்பாய்க்கு அருகே நெருப்போடு விளையாட வேண்டாம்’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள சிறப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகிலேயே எளிதில் தீப்பற்றக் கூடிய வகையில் உள்ள வட கொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான அத்துமீறல் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றும் நிலைக்கு தள்ளிவிடும்.
Read More →Jul 9, 2017
“கெட்ட நடத்தை உடையவனும் கபடப் பார்வை கொண்டவனும் நேர்மையற்றவனுமாகிய ஒருவனைத் தனது நண்பனாக்கிக் கொள்பவன் விரைவில் பாழடைந்து போவான்.”
– சாணக்கியர்
He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined.
-Chanakya
Read More →Jul 9, 2017
மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜுனைத் கானின் குடும்பத்தினர் டெல்லியில் ரமதான் சமயத்தில் , ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுபாதுகாப்பு பயங்கரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜூனைத் கான் கொலைவழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் முதற்கட்ட விசாரணை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More →Jul 9, 2017
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர். இந்நிலையில், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்தின் ஒலிப்பதிவுக்காக அவர் உலக ஒலிப்பதிவு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவர் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார். இந்த படம் இந்திய வம்சாவளி இங்கிலாந்து இயக்குனர் குரிந்தர் சத்தா இயக்கி உள்ளார். ஹுமா குரேஷி, ஹுக் போனிவில்லே, கில்லியன் ஆண்டர்சன், மறைந்த நடிகர் ஓம்புரி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்தில் வெளியான இப்படம், ‘பார்ட்டிசன்-1947’ என்ற பெயரில் ஆகஸ்டு 18-ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களில், வைஸ்ராய் இல்லத்தில் (தற்போதைய ஜனாதிபதி மாளிகை) நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.
Read More →Jul 9, 2017
முதன் முதலாக சலனப்படங்களை எடுத்து உலகம் முழுவதும் எடுத்துச் சென்று சினிமா எனும் கலைவடிவம் தோன்றிப் பரவக் காரணமானவர்கள் லூமியர் சகோதரர்கள் ஆவர். இவர்களது திரைப்படங்களின் காட்சித் தொகுப்புக்களை புனேவில் திரையிட்ட நிகழ்சிக்கு மும்பையிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதில் சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் காணப்பட்டனர். லூமியர் சகோதரர்களின் தி கார்ட்டெனர் அல்லது ஜம்பிங் தி பிளாங்கெட் போன்ற திரைக்காட்சித் தொகுப்புகளை அவர்கள் ரசித்துப் பார்த்தனர். முக்கியமாக ரசிகர்கள் அதிகம் பாராட்டியது அரிதான காட்சிகளின் தொகுப்பான வித் அவர் கிங் அண்ட் குயின் த்ரூக் இந்தியா (1912) எனும் படத்தின் காட்சிகளையாகும். இது 1911 ஆம் ஆண்டின் டெல்லி தர்பார் சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.
Read More →Jul 9, 2017
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டிகளில், ரோஜர் பெடரர் காலிறுதிக்கான தகுதி பெற்றார்.
அவர் ஜெர்மனியின் திறமையான ஆட்டக்காரரான மிஷா செவரேவ்வை 7-6(3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முப்பத்தி ஐந்து வயதாகும் பெடரர் வெற்றி பெற்றால் அதிக வயதில் பட்டம் வென்ற வீரராக இருப்பார். பெடரர் கடந்த மூன்று ஆட்டங்களிலும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வென்று வருகிறார். உலகின் முப்பதாவது தர நிலை வீரராக இருக்கும் செவரேவ் இதுவரை நான்கு முறை பெடரருடன் விளையாடியுள்ளார்; ஆனால் ஒருமுறை கூட வென்றதில்லை. செவரேவ் 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரரை வெல்வதற்கு கடும் முயற்சி செய்தாலும் முதல் செட்டில் ஒரு டை-பிரேக்கரை எதிர்கொண்டது தவிர நிலைத்து விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களில் பிரேக் பாயிண்ட்களை எடுத்து ஆட்டத்தை ஒரு ஏஸ் சர்வீசுடன் வென்றார்.
Read More →Jul 9, 2017
இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி, பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்னும், கைல் ஹோப் 46 ரன்னும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 36 ரன்னும், ரோவ்மன் பவெல் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
Read More →