Latest Posts

அமெரிக்கா: விமான விபத்தில் ஆந்திர டாக்டர் தம்பதி பலி

Jul 13, 2017

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள லோகன்ஸ் போர்ட் நகரில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மனோநல மருத்துவர்-தம்பதி உமாமகேஸ்வர் ராவ் காலாபடபு (வயது 63), சீதாகீதா (வயது 61). இவர்கள் பயணம் செய்த பைப்பர் ஆர்ச்சர் பி.ஏ.28 விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் இறந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து லோகன்ஸ்போர்ட் நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ராஜ் கிளினிக்’ என்ற பெயரில் மனநல மருத்துவமனை நடத்தி வந்தனர். இண்டியானா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இதன் கிளை மருத்துவமனைகள் உள்ளன. கடந்த 8-ந் தேதி இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில் லோகன்ஸ்போர்ட் நகரில் இருந்து புறப்பட்டனர். விமானத்தை உமாமகேஸ்வர் இயக்கினார்.

Read More →

துருக்கி: வான்தாக்குதலில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 11 பேர் பலி

Jul 12, 2017

துருக்கியில் வான்தாக்குதலில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 11 பேர் பலியாகினர். குர்திஷ் இன பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க துருக்கி ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. குர்திஷ் இன பயங்கரவாதிகள் துருக்கிய ராணுவவீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சிரியா எல்லையையொட்டி உள்ள டார்கெசிட் மாவட்டத்தில் குர்திஷ் இன பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி போர் விமானம் குண்டு மழை பொழிந்தது. இதில் குர்திஷ் இன பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன. அதே போல் ஹக்காரி மாகாணத்தில் ஈராக் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்து உள்ள நகரில் குர்திஷ் இன பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளின் மீது துருக்கி போர் விமானம் குண்டுகளை வீசியது.

Read More →

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உடனே மூடப்பட வேண்டும் : நீதிமன்ற ஆணை

Jul 12, 2017

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், அது உடனே மூடப்பட வேண்டும் என நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது. நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் சரத் இனிகோ என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.    

Read More →

கர்நாடக கிராமத்தில் ஏலியன் நடமாட்டமா ?

Jul 12, 2017

கர்நாடகா மாகாணத்திலிருக்கும் அன்டுர் என்ற கிராமத்தில் ஒரு விவசாயப் பண்ணைக்கு அருகே, சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்தன. இதைப் பார்த்த மக்கள் இது எந்த விலங்கின் கால்தடமோ என்று வியந்தனர். எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர். ஞாயிறன்று அதிகாலையில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

Read More →

அருணாச்சல பிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

Jul 12, 2017

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேசத்தின் பப்பும் பரே மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், லெப்டாப் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன. வெளியே முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழைக் காரணமாக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. இதனையடுத்து, உள்ளூர் அரசு அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கந்து ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Read More →

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி

Jul 11, 2017

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரரான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும். இத்தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய குடியரசு துணைத் தலைவரான ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் சோனியா காந்தி பிற எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இதனை அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குலாம் நபி ஆசாத், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Read More →

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

Jul 11, 2017

பி.சி.சி.ஐ. அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. அணியின் சிறப்பான முன்னேற்றத்துக்காக, இந்த நியமனங்களைப் பரிந்துரைத்திருப்பதாக பிசிசிஐ கெளரவ செயலர் பொறுப்பு வகிக்கும் அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார்.

Read More →

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

Jul 11, 2017

மாடுகள் சந்தையில் கசாப்பிற்காக விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைநிறுத்த ஆணை பிறப்பித்ததை உச்சநீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைநிறுத்த ஆணை நாடு முழுவதும் செல்லுபடியாகும். சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மாற்றியமைக்க விரும்பவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் தடுத்து நிறுத்தும் முன்னர், கேரள உயர்நீதிமன்றம் அதனைத் தடுத்து நிறுத்த மறுத்து விட்டது. இவ்விரு முரண்பட்ட ஆணைகளில், சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக வழங்கிய தடுப்பு ஆணையே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

Read More →

முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து

Jul 11, 2017

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உலகிலேயே விலையுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தியேட்டர், நீச்சல் குளம் உள்பட சகல வசதிகளும் காணப்படுகின்றன. இதன் 6–வது மாடியில் முகேஷ் அம்பானி தோட்டம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், 6–வது மாடியில் இருந்து குபு குபுவென கரும்புகை வெளியேறியது. அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Read More →

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி

Jul 11, 2017

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். 4.4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 64 ரன்னாக உயர்ந்த போது கேப்டன் விராட்கோலி (39 ரன்கள், 22 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீச்சில் சுனில் நரினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »